மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்

  • 20 மே 2017

இந்த வாரம் ஒருநாள் காலை வேளையில் சௌதி அரேபியாவிலுள்ள மகளிர் பள்ளி ஒன்றில், ஆசிரியைகளின் அறையில் நுழைந்த தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்தார். காதலை வெளிக்காட்டும் தலைசிறந்த அலங்காரங்கள் அங்கு செய்யப்பட்டிருந்ததை கண்டு அவர் குழப்பமடைந்தார்.

படத்தின் காப்புரிமை YouTube/UrgentNews
Image caption பணம், கேக், அணிகலன், பூக்கள் - சௌதி அரேபியாவில் மன்னிப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி

ரோஜா இதழ்கள் மற்றும் பணநோட்டுகள் தரையிலும், நாற்காலி மற்றும் மேசையிலும் சிதறிக்கிடந்தன.

மிக பெரிய ஹீலியம் பலூன்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் நடுவில் இருந்த மேசையில் பல கேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. பல பெரிய அடுக்கு மற்றும் வெள்ளை ராயல் பனிக்கட்டிகளால் அவை மூடப்பட்டிருந்தன.

அந்த அறையின் ஒரு மூலையில், பல பெரிய கட்டு ரோஜாக்களின் நடுவில், பொன்னால் செய்யப்பட்ட நெக்லஸ் அணிகலன் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு அடுத்தாக மின்னும் விளக்குகளோடு இலக்கிய குறிப்பொன்று இருந்தது.

இந்த மிகப் பெரிய வேலைப்பாடுகள் அனைத்தும் தன்னுடைய மனைவியோடு சண்டையிட்டு கொண்ட கணவர் ஒருவரின் செயல் என்று கல்ஃப் நியுஸ் இணையதளம் தெரிவித்திருக்கிறது.

சௌதி பெண்களுக்கு பணிகளில் அதிகரிக்கும் வாய்ப்பு

'சௌதி அரேபியா மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைகின்றன'-அம்னெஸ்டி

இது பற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு, வைரலாகி பல லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. .

படத்தின் காப்புரிமை PHILIPPE DESMAZES/AFP/Getty Images

இந்த செயல் பற்றி பல பதில்களுக்கு மத்தியில், மகளிர் பள்ளி ஒன்றில் ஆண் ஒருவரால் எவ்வாறு செல்ல முடிந்தது என்ற கோபக்குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

"தன்னுடைய மனைவிக்கு மதிப்பளிக்கின்ற ஒரு மனிதனின் நல்ல குணமும், விசுவாசமும்தான் இதில் தெரிகிறது. ஆனால், இத்தகைய பொறுப்பற்ற முறையில் செய்திருக்கக்கூடாது. இவ்வாறு செய்ய விரும்பினால், சொந்த வீட்டில் செய்திருக்கலாமே" என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் இந்த பள்ளியின் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர் என்றும். அதனால்தான் பள்ளிக்கூடம் பூட்டப்பட்ட பின்னரும் உள்ளே நுழைய முடிந்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

“தங்கள் மீது வழக்கு தொடுக்கும் அனுமதியால் சர்வதேச சமூகம் கவலை” - சௌதி

சௌதி அரேபியாவின் பழமைவாத சமூகத்தில், மாணவரும், மாணவியரும் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிப்பதில்லை. அதேபோல பொதுவிடங்களில் ஆண்களும், பெண்களும் நெருங்கிப் பழகக்கூடாது என்று கூறப்படுகிறது.

பெண்கள் மீதான சில கட்டுப்பாடுகளை நீக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், அதிமான பெண்கள் வேலை செய்ய வைக்கும் நோக்கோடுதான் இந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

வட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை; 700 கி.மீ. பறந்தது

'ஏமாற்றங்களுக்கிடையிலும் முஸ்லீம்களின் தொடரும் திராவிட ஆதரவு'

மனிதர் உணர்ந்து கொள்ள ஒரு மனித நூலகம்

தொடர்புடைய செய்திகள்

சௌதி அரேபியா: குறைவான சம்பளம், பாஸ்போர்ட் பறிப்பு- தமிழரின் கதை

ஏமன் உள்நாட்டு போரில் உதவுவதற்காக, ஜிபூட்டியில் செளதி அரேபிய ராணுவ தளம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்