ஊழலால் பதவியிழந்த தென் கொரிய அதிபர் விட்டுச்சென்றது பத்து பக்கம் மட்டுமே

  • 16 மே 2017

தென்கொரியாவில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் குன் ஹெ தலைமையிலான அரசு, எந்தவிதமான தகவல்களையும் விட்டுச் செல்லவில்லை என்று ஆளும் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

வெளியேறிய முந்தைய அரசு, வெறும் பத்து பக்க ஆவணத்தை மட்டுமே ஒப்படைத்துச் சென்றிருப்பதாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஓ யாங்-ஹுன் தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் மார்ச் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் குன் ஹெ, தற்போது விசாரணைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

தென் கொரிய அதிபர் பதவி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

தென் கொரிய அதிபர் மீதான ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: 29 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல்

ஒரு லட்சம் ஆவணங்கள் முப்பது ஆண்டு காலத்திற்கு முடக்கப்பட்டிருப்பதாக ஓ யாங்-ஹுன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP/getty

தென்கொரிய சட்டங்களின்படி, பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் தன்னைப் பற்றிய ஆவணங்களை முடக்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முந்தைய அதிபரின் ஆட்சியில், 26 காகிதம் வெட்டும் இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் செய்தித்தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

நான்காவது வாரமாக தொடரும் தென் கொரிய அதிபருக்கு எதிரான போராட்டம்

தென் கொரிய அதிபர் அலுவலகம் வயாகரா மாத்திரைகளை வாங்கிய விசித்திரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்