வட கொரிய ஏவுகணை சோதனை: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

  • 16 மே 2017

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை ஒருமனதாக கண்டித்திருக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், அந்நாட்டிற்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

வட கொரியா புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தக்கூடாது என்று 15 உறுப்பினர்களை கொண்ட இந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கோரியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்த ஏவுகணை பெரிய அணு ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடிய சக்தி கொண்ட புதிய வகை ராக்கெட் என்று வட கொரியா கூறியுள்ளது.

இந்த ஏவுகணை 700 கிலோமீட்டர் (435 மைல்) தெலைவும், 2 ஆயிரம் கிலோமீட்டர் உயரமும் சென்று ஜப்பானின் மேற்கு கடற்பரப்பில் விழுந்துள்ளது.

"புதிதாக வடிவமைக்கப்பட்ட`` பேலிஸ்டிக் ராக்கெட்டை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது.

வட கொரியாவின் இந்த கூற்றுக்களை இன்னும் உறுதி செய்ய வேண்டியுள்ளது என்று தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images

கண்டம் விட்டு கண்டம் பாயும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை வடிவமைப்பதற்கு மிக முக்கிய செயல்பாடான, வளிமண்டலத்தை தாண்டி சென்று மீண்டும் வளி மண்டலத்தில் நுழைகின்ற சக்தியுடையதாகவே வட கொரியாவின் இந்த ஏவுகணை தோன்றுவதாக தென் கொரியாவின் யுன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

"அணு ஆயுத ஒழிப்புக்கு தங்களுடைய பொறுப்பான அர்ப்பணத்தை நடைமுறை செயல்பாடுகள் மூலம் உடனடியாக காட்ட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை; 700 கி.மீ. பறந்தது

அமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா?

வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்

வட கொரியா இனிமேலும் அணு ஆயுத மற்றும் பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தக்கூடாது என்றும் இது தெரிவித்தள்ளது. .

2006 ஆம் ஆண்டில் இருந்து 6 தொகுதி தடைகளை இந்த கவுன்சில் வட கொரியா மீது விதித்துள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இடை மற்றும் நீண்ட தொலைவு பாய்ந்து சென்று தாக்குகின்ற பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக திங்கள்கிழமை அதிகாலை வட கொரியாவின் கேசிஎன்ஏ நியூஸ் முகமை தகவல் வெளியிட்டது.

படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images

பெரிய அளவில் கனரக அணு ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேலிஸ்டிக் ராக்கெட்டின் தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப வரையறைகளை சோதித்து பார்க்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இது தெரிவித்துள்ளது.

வட கொரியா அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வடிவமைத்து தாங்கள் விரும்புகின்ற இலக்கில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகிறது. இவை இரண்டும் ஐக்கிய நாடுகள் அவையின் தடைகளை மீறி நடத்தப்பட்டு வருகின்றன. ஐந்து அணு ஆயுத சோதனைகளை வட கொரியா எற்கெனவே நடத்தியுள்ளது.

”வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கிம் ஜாங்-உன்னின் சித்த பிரமையே காரணம்”

"அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"

பெரும் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் படைத்தது புதிய ஏவுகணை: வடகொரியா

ராக்கெட்டு ஒன்றில் சுமந்து செல்லக்கூடிய வகையில் சிறியதாக அணு ஆயுதங்களை தயாரிக்க வட கொரியா சக்தி பெற்றிருக்கிறதா? என்பது என்னும் தெளிவாக தெரியிவில்லை.

வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதாவது அமெரிக்காவை தாக்குகின்ற பேலிஸ்டிக் ஏவுகணையை இதுவரை சோதித்ததில்லை.

கண்டம் விட்டு கண்டம் பாயும் பேலிஸ்டிக் ஏவுகணைகள் பொதுவாக 6 ஆயிரம் கிலோமீட்டர் வரை சென்று தாக்கக்கூடியவை.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், வட கொரியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில், உயர்ந்த பகுதியில் அல்லாமல், தரமான உயரத்தில் வைத்து இந்த ஏவுகணை செலுத்தப் பட்டிருந்தால் 4 ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் இது பறந்து சென்றிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஏவுகணை சோதனை எப்போதும்போல வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கேசிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தயார்

இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் "இத்தோடு மனநிறைவு கொள்ள கூடாது. அமெரிக்கா `சரியானதை தேர்ந்தெடுக்கும் வரை` அணு ஆயுதங்களையும், அதனை வெடிக்க செய்யும் வழிமுறைகளையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்" என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

ஏவுகணை சோதனைகளை நிறுத்தவது உள்பட சரியான சூழ்நிலையில் வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகை விவாதிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வட கொரியா மிக நீண்ட காலமாக தெளிவானதொரு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது, இது வழங்கியுள்ள 'சமீபத்திய ஆத்திரமூட்டல்' இன்னும் வலுவான தடைகளை அதன் மீது விதிக்க எல்லா நாடுகளுக்குமான அழைப்பாகும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.

"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

வடகொரியாவுக்கு செல்ல விரும்பும் புதிய தென்கொரிய அதிபர்

வட கொரிய தலைவர் கிம், அமெரிக்க நிபந்தனைகளை ஏற்கும் வரை, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவையின் தூதர் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

வட கொரியாவோடு ஆழமான நட்புறவை விரும்புகின்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் இந்த ஏவுகணை சோதனையை 'பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கை' என்று கூறியுள்ள நிலையில், வட கொரியாவின் ஒரேயொரு கூட்டாளியான சீனா எல்லா தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் இருக்க வலியுறுத்தியுள்ளது.

வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்

தொடர்படைய செய்திகள்

வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

வட கொரியா விவகாரம்: ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்

கிம் ஜோங்-உன்-ஐக் கொல்ல அமெரிக்கா சதி - வடகொரியா பகீர் குற்றச்சாட்டு

தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வட கொரியா திட்டமா?

வடகொரிய ஏவுகணையை எதிர்கொள்ள அமெரிக்காவின் `தாட்' இயங்கத் துவங்கியது

ஏவுகணை தயாரிப்பை மறைக்க வட கொரியா செயற்கை கோள் திட்டமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்