ரஷியாவிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்ததை நியாயப்படுத்துகிறார் டிரம்ப்

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு பற்றிய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது "முற்றிலும் சரி" என தன் செய்கையை நியாயப்படுத்தியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

படத்தின் காப்புரிமை Getty Images

"பயங்கரவாதம் மற்றும் விமான சேவை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும்" ஐ.எஸ்., மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோஃபை சந்தித்தார் டிரம்ப்.

விமானங்களில் மடிக்கணினியின் உபயோகம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினரின் திட்டத்தை வெளிப்படுத்தும் அதீத ரகசிய தகவல்களை டிரம்ப் பகிர்ந்துள்ளதாக `வாஷிங்டன் போஸ்ட்` தெரிவித்துள்ளது.

தனது பங்குதாரரிடம் இருந்து பெற்ற ரகசிய தகவல்களை, அனுமதி பெறாமல் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரகசிய தகவல்களை வெளிப்படுத்தும் உரிமை அதிபருக்கு இருப்பதால் இது சட்டப்பூர்வமற்றதல்ல.

டிரம்பின் இந்த செய்கை ஜனநாயக கட்சியினரின் மத்தியில் பெரும் கண்டனங்களை உருவாக்கியது. மேலும் அவரின் குடியரசுக் கட்சி இது குறித்து விளக்கத்தை கோரியுள்ளது.

இது குறித்த பிற செய்திகள்:

ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்தாரா டிரம்ப்?

பதவி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குநருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்