ஆஃப்கன் அரசு தொலைக்காட்சி கட்டடத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்; 6 பேர் பலி

  • 17 மே 2017
படத்தின் காப்புரிமை EPA
Image caption தொலைக்காட்சி கட்டடத்திற்குள் தாக்குதல்தாரிகள் நுழைந்தவுடன் கடும் துப்பாக்கிச்சூடு வெடித்தது.

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் அரசு தொலைக்காட்சி கட்டடத்தில் நடைபெற்ற மோதலில் குறைந்தது 6 பேர் மற்றும் ஐ எஸ் குழுவை சேர்ந்த 4 ஆயுததாரிகள் என மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் நான்கு பேர் ஆர் டி ஏ ஒலிபரப்பு நிறுவனத்திற்காக பணியாற்றியவர்கள். மேலும், போலிசார் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மதில் சுவருக்கு வெளியே இரு தற்கொலை குண்டுதாரிகள் தங்களை தாங்களே வெடிக்க வைத்த போது தாக்குதல் தொடங்கியது. மற்ற இருவர் தொலைக்காட்சி நிலையத்திற்குள் நுழைந்தனர். பாதுகாப்பு படைகள் சுமார் நான்கு மணி நேரத்திற்கு சண்டையிட்டனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆயுததாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை பலமணி நேரங்களாக நடைபெற்றது.

இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

பாகிஸ்தான் உடனான எல்லைப்பகுதிக்கு கிழக்கே ஐ எஸ் குழுவினர் வலுவாக உள்ள பகுதிக்கு அருகே தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த பகுதியில் தாலிபன் படையினருக்கும் வலுவான இருப்பு உள்ளது. ஆனால், தங்களுக்கு இதில் தொடர்பில்லை என தாலிபன் கூறியுள்ளது.

கூடுதல் செய்திகள்:

கார்த்தி சிதம்பரம்: சர்ச்சைகளின் மத்தியில்

82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா

காட்டுப் பன்றியின் திடீர் சந்திப்பால் திணறிப்போன பிரிட்டன் தூதரின் `திகில்’ அனுபவம்

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி

இணைய தாக்குதலில் லாசரஸ் குழுமத்துக்கும் பங்கு உண்டா?

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பள்ளி மாணவிகள் உண்ணாவிரதம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரபல கடல் உடும்பு காணொளிக்கு பாஃப்தா விருது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்