காதலனை கரம் பிடிக்க அரச அந்தஸ்தை தியாகம் செய்யும் ஜப்பான் இளவரசி

  • 18 மே 2017

ஜப்பானின் அரச குடும்ப உறுப்பினரான இளவரசி மாகோ, சாதாரண குடிமகன் ஒருவரை மணப்பதன் மூலம் தனது அரச குடும்ப அந்தஸ்தை இழக்கத் தயாராகிவிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption காதலுக்காக அரச அந்தஸ்தை தியாகம் செய்யும் இளவரசி

பேரரசர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தியான 25 வயதாகும் இளவரசி மாகோவுக்கும், அதே வயதை சேர்ந்த சட்ட நிறுவன ஊழியரான கே கொமுரோவுடன் திருமண நிச்சயமாகவுள்ளது.

இவர்கள் இருவரும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் சந்தித்தனர்.

ஜப்பானின் ஏகாதிபத்திய சட்டத்தின்படி, சாதாரண குடிமகனை மணந்தால் இளவரசி அரச குடும்ப அந்தஸ்தை விட்டு விலக வேண்டும்.

டோக்யோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது கடந்த 2012-ஆம் ஆண்டில், இளவரசி மாகோவும், கே கொமுரோவும் சந்தித்தனர்.

ஜப்பானில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் ''பிரின்ஸ் ஆஃப் தி ஸீ' அமைப்பில் கே கொமுரோ முன்பு ஒருமுறை பணியாற்றினார்.

கடந்த புதன்கிழமையன்று, தங்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து கொமுரோ கூறுகையில், ''இதுகுறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல. ஆனால், சரியான நேரத்தில் இதுகுறித்து நான் பேசுவேன்'' என்று தெரிவித்தார்.

இளவரசியின் திருமண நிச்சயம் தொடர்பான திட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனமான சிஎன்என்னிடம் ஜப்பான் அரச குடும்பம் உறுதி செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 83 வயதான பேரரசர் அகிஹிட்டோ தனது கடமைகளை ஆற்றுவதற்கு தன் வயது தடையாக இருக்கலாம் என்பதால் தான் பதவி விலக விரும்புவதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்கலாம்:

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் உலகின் நீண்ட பூனை!

பொருத்தமான உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா?

தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்