பாம்பு வாயில் முத்தம்

  • 18 மே 2017
Image caption விபரீத முத்தம்

ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவர் பெரும் விஷத்தன்மை வாய்ந்த ரேட்டில் ஸ்னேக் என்ற பாம்பு ஒன்றுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த போது,அவரது முத்த முயற்சியை நிராகரித்த அந்த பாம்பு, அவரை கடித்து வைக்க தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த திங்களன்று, ஃப்ளோரிடா மாகாணத்தின் வட-கிழக்கில் உள்ள புட்ணம் பிரேதேசத்தை சேர்ந்த சார்லஸ் கோஃப் இந்தப் பாம்பை பார்த்தார்.

ஒரு நாள் கழித்து, அவருடைய அண்டைவீட்டுக்காரர் என உள்ளூர் சிபிஎஸ் சேனல் கூறும் ரான் ரெயினோல்ட் என்பவர் அந்த பாம்புடன் விளையாட ஆரம்பித்துள்ளார்.

அதன்பிறகு தான் இந்த தவறான வேலையைச் செய்துள்ளார்.

பாம்பு கடித்த ரெயினோல்ட் விமானம் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் தற்போது உடல்நிலை தேறி வருகிறார்.

''ஒரு சிறுவன்,'நான் அந்த பாம்பின் வாயில் முத்தமிடப்போவதாக கூறினான்,' அதன்பிறகு பாம்பு அவனுடைய முகத்தில் கொத்திவிட்டது,'' என்று `ஆக்ஷன் நியூஸ் ஜேக்ஸ் என்ற செய்தி சேனலிடம் கோஃப் தெரிவித்துள்ளார்.

'' ரான் சில்லறைத்தனமாக நடந்து கொண்டார். நான் சாத்தானை கூட முத்தமிட்டுவிட்டு தப்ப முடியும் என்று அவர் கூறியதாக நினைக்கிறேன், ஆனால் அவரால் முடியவில்லை.''

பாம்புக்கடியால் சிகிச்சை பெற்றுவரும் நபர் சுய நினைவோடு இருப்பதாகவும், ஆரம்பத்தில் ஓர் மோசமான நிலையில் இருந்ததாகவும் ஃபர்ஸ்ட் கோஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முத்த முயற்சி சோதனையை தொடர்ந்து பாம்பு அங்கிருந்து தப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால், ஒரு பாம்பிற்கு ரான் ஏன் முத்தம் கொடுக்க முயற்சித்தார் என்பது இதுவரை தெளிவாகவில்லை.

பிற செய்திகள்

காதலுக்காக அரச அந்தஸ்தை தியாகம் செய்யும் இளவரசி

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி நியமனம்

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் உலகின் நீண்ட பூனை!

பொருத்தமான உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்