வன்செயலுக்கு பயந்து அநாதையாக நாட்டைவிட்டு ஓடும் சிறார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வன்செயலுக்கு பயந்து அநாதையாக நாட்டைவிட்டு ஓடும் சிறார்கள்

  • 18 மே 2017

சிரியாவில் இருந்து வந்த ஆதரவற்ற பிள்ளைகளுக்கு வதிவிடமும், கல்வியும் கொடுப்பதற்கான மையம் ஒன்றை துருக்கி ஆரம்பித்துள்ளது.

இங்கு சுமார் ஆயிரம் சிறார்கள் அடைக்கலம் பெறுவார்கள். துருக்கியில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான சிறார் அகதிகள் இருக்கிறார்கள்.

ஆனால், பெற்றோரின் துணையின்றி உலகெங்கும் பயணிக்க நேரிடும் குழந்தைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.