லட்சக்கணக்கான இந்திய பெண்கள் பணியிலிருந்து விலகுவது ஏன்?

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் முதல்முறையாக, பெண்கள் தொழிலாளர் எண்ணிக்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெண் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஏன்?

•2004-05 லிருந்து 2011-12 ஆம் ஆண் வரை சுமார் 20 மில்லியன் இந்திய பெண்கள் பணியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

•வேலை செய்யும் வயதுடைய பெண்கள் பணிகளில் ஈடுபடுவது 1991-93 ஆம் ஆண்டு 42 சதவீதமாக இருந்தது. ஆனால் அது 2011-12 ஆம் ஆண்டில் 31 சதவீதமாக குறைந்துள்ளது.

•பணியிலிருந்து விலகியவர்களில் 53 சதவீதம் பேர் 15-24 வயதிற்குட்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள் ஆவர்.

•கிராமப்புறங்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2004-05 மற்றும் 2009-10 ஆண்டுகளில் 49 சதவீதத்திலிருந்து 37.8 சதவீதமாக குறைந்துள்ளது.

•2004-05 லிருந்து 2009-10 ஆம் ஆண்டுகள் வரை 24 மில்லியனிற்கும் அதிகமான ஆண்கள் தொழிலாளர்களாகியுள்ளனர்; ஆனால் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 21.7 மில்லியனாக குறைந்துள்ளது.

உலக வங்கியிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களில் சேகரித்த தகவல்கள் படி இந்த நிலையை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

"இதில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் குறித்து நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதால் அதன் தொழிற்துறையில் அதிகளவில் பெண்கள் பங்குபெறும் சூழல் ஏற்பட வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக வளர்ந்து வரும் சூழலில் இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் குறைந்து வருவதற்கு என்ன காரணம்?

திருமணம், தாய்மையடைதல், பெண் என்பதால் பாரபட்சம், ஆண்களால் ஆதிக்கப்படுத்தப்படுவது, மோசமாக நடத்தப்பெறுவதே இதற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இது மட்டுமே காரணங்கள் என்று கூற இயலாது. எடுத்துகாட்டாக திருமணத்தால் பெண்கள் பணிபுரிவதிலிருந்து விடுபடுகிறார்கள் ஆனால் கிராமப்புறங்களில் திருமணமாகாத பெண்களை காட்டிலும் திருமணம் ஆன பெண்களே அதிகமாக வேலைக்கு செல்கிறார்கள் ஆனால் நகரங்களில் இந்தச் சூழல் தலைகீழாக உள்ளது.

வாழ்க்கை லட்சியங்கள் மற்றும் வளமையான சூழல் காரணமாகவும், சம வயது பெண்கள் பலர் பணியிலிருந்து நீங்குகின்றனர்.

கிராமங்களில் பெண்கள் பணிபுரிவது குறைந்து வருவது குறித்தும் நாம் ஆராய வேண்டும்.

பணிகளில் பெண்களின் பங்கெடுப்பு விகிதம், மற்றும் கல்வி பெறும் விகிதம் ஆகியவற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், 15-24 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் கிராமப்புற பெண்கள், பணிகளில் பங்கேற்காமல் இருப்பது, மேற்படிப்பிற்கான வாய்ப்பு அதிகரித்து இருப்பதும், மேலும் இளம் வயதில் பணியில் சேராமல் கல்வியை தொடர நினைக்கும் மனப்பான்மை சமுதாயத்தில் நிலவுவதாலும் ஆகும்.

படத்தின் காப்புரிமை EPA

பணக்காரர்களை காட்டிலும் வருமானம் அதிகரித்துள்ள ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது என இந்த ஆய்வு கூறுகின்றது.

மேலும் குறைந்த ஊதியம் பெறும் பெண்கள் தங்கள் குடும்பத்திலுள்ள ஆண்களுக்கு அதிக வருவாய் கிடைத்த பிறகு தங்கள் குடும்பத்தில் வருவாய் நிலையான இடத்தை அடைந்தவுடன் பணியிலிருந்து நின்று விடுகின்றனர்.

"குடும்ப வருமானம் நிலையாக இருப்பதால் பெண்கள் வேலைக்கு செல்லாமல் இருந்து விடுவதாக" இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

"தற்போதைய கல்வி தரத்தையும் இது எதிரொலிக்கிறது. கிராமங்களில் உள்ள பெண்கள் ஊதியம் பெறும் பணிகளை விடுத்து வீடுகளில் சுய தொழில் செய்கிறார்கள்.

ஆனால் பணியிலிருந்து விடுத்து பள்ளிக்கு செல்பவர்கள் அல்லது கல்வி பயில செல்பவர்கள் இறுதியில் பணிபுரிவார்களா என்பதும் சந்தேகமே".

இந்தஆய்வில் பெண் தொழிலாளர் விகிதம் மற்றும் அவர்களின் கல்வி சாதனைகள் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பை குறித்து ஆராய்ந்த பிறகு, பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் காரணத்தால் மட்டுமே பெண்கள் பணிகளில் ஈடுபடுவது இல்லை என தெரியவந்துள்ளது.

நகரங்கள் மற்றும் கிராமங்களில் பத்தாம் வகுப்புவரை படித்தவர்களை காட்டிலும் கல்வி பயிலாதவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் அதிகமாக பணிகளில் ஈடுபடுகின்றனர்.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால் பொதுவாகவே சமீப வருடங்களாக பெண்கள் பணிகளுக்கு செல்வது குறைந்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் பணிபுரியும் விகிதம் அதிக அளவில் குறைந்துள்ளது; சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பதிவுப்படி 2013 ஆம் ஆண்டில் 131 நாடுகளில் இந்தியா 121 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது உலகளவில் மிகவும் குறைந்த இடம் ஆகும்.

2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சீனாவின் பெண் தொழிலாளர்களின் விகிதம் 68 சதவீதத்திலிருந்து 64 சதவீதமாக மாறியது இருப்பினும் அது இந்தியாவைக் காட்டிலும் அதிகமாகும். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இந்த விகிதம் 2 சதவீதமாகதான் குறைந்துள்ளது.

விவசாயத்திற்கு அப்பாற்பட்டு பெண்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் பெண்கள் ஏற்றுக் கொள்ளதக்கவாறும் அவர்களையும் அவர்கள் குடும்பத்தினர்களையும் கவரும் வகையிலும் பணிகள் இருக்க வேண்டும்.

பெண்கள் பணிகளில் ஈருபடுவதை அதிகரிப்பது குறித்து பேசும் அவர்கள் குடும்பத்தினரையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

"மற்றொரு ஆய்வின்படி விவசாயம் சார்ந்த பணிகள் பெண்களுக்கு அதிகமாக கிடைக்காததால் வீட்டிலேயே பொருளாதாரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே வீட்டில் சுயமாக வேலை செய்யும் பெண்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

பிற செய்திகள்:

தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்!

கறுப்பான, பருமனான பெண்கள் மீது ஏன் இவ்வளவு வேறுபாடு?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்