கிழக்கு சீன கடலில் அமெரிக்க விமானத்தை இடைமறித்த சீனா ஜெட் விமானங்கள்

  • 19 மே 2017
படத்தின் காப்புரிமை AFP
Image caption சுகோய் சு-30 ரக போர் ஜெட் விமானம்

இரு சீன சுகோய் சு-30 ரக போர் ஜெட் விமானங்கள் தொழில் முறையற்ற வகையில் ஓர் அமெரிக்க விமானத்தை இடைமறித்ததாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

கிழக்கு சீன கடல் மீது சர்வதேச வான் பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் ஓர் முயற்சியில் அமெரிக்காவின் விமானம் ஒன்று ஈடுபட்டிருந்தது.

வட கொரியாவால் சாத்தியமான அணுசக்தி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா என்பதற்கான ஆதாரங்களை கண்டறிய இந்த விமானம் முன்னர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தது.

''பொருத்தமான ராஜீய மற்றும் ராணுவ நடைமுறைகள் மூலம் இந்த விவகாரம் சீனாவிடம் கொண்டு செல்லப்பட்டுவருகிறது", என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த இடைமறித்தல் நிகழ்வானது'' சீன விமானிகள் விமானத்தை இயக்கிய விதம், இரு விமானங்கள் பயணித்த வேகம் மற்றும் மிக அருகருகே பயணித்தது ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது , அது ஒரு தொழில் முறையற்ற இடைமறித்தல் என்று கருதப்படுகிறது "' என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க விமானப்படையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்ணல் லோரி ஹோட்ஜ் கூறியுள்ளார்.

ராணுவ விசாரணை ஒன்று நடந்து கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள் :

ICJ தீர்ப்பை புறக்கணித்த/ஏற்றுக் கொண்ட சில முன்னுதாரணங்கள்

'பருமனானலும் உடல் தகுதியுடன் இருக்கமுடியும் என்பது கட்டுக்கதை'

புனிதமாகக் கருதப்படும் மலைமீது பெண் நிர்வாணப் படம் எடுத்ததால் சர்ச்சை

சிறப்பு வழக்கறிஞர் நியமனம்: சீறுகிறார் டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்