பிரேசில்: வலுக்கும் எதிர்ப்பு; ஆபத்தில் அதிபர் பதவி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரேசில்: வலுக்கும் எதிர்ப்பு; ஆபத்தில் அதிபர் பதவி

பிரேசில் அதிபர் மிஷெல் டெமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

தன் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை அவர் ஏற்றுக்கொள்வதைக் காட்டும் ஒலிப்பதிவுகள் வெளியானதாக கூறப்படுவதைத்தொடர்ந்து அவருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அவர் மீதான புகார்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் அவர் மீது குற்றம்சுமத்தி பதவி நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிரான போராட்டங்கள் இரவு முழுவதும் நீடித்திருந்தாலும், தான் பதவி விலகப்போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்