விக்கிலீக்ஸ் நிறுவனர் விடுதலையாவாரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விக்கிலீக்ஸ் நிறுவனர் விடுதலையாவாரா?

  • 19 மே 2017

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுவிக்கப்படுவாரா?

பாலியல் வல்லுறவு புகாரில் அவர் மீதான பிடியாணையை ஸ்விஸ் அதிகார்கள் ரத்து செய்துள்ளனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கான பிடியாணையை அவரிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லையென அவர்கள் கூறியுள்ளனர்.

2012ஆம் ஆண்டு முதல் லண்டனிலுள்ள இக்வடார் தூதரகத்திற்குள்ளேயே அசாஞ்சே அடைபட்டு வாழ்ந்து வருகிறார்.

ஸ்டாக்ஹோமில் விக்கிலீக்ஸ் செய்தியாளர் சந்திப்பு நடந்த அதே ஆண்டில் இவர் மீது இந்த பாலியல் புகார் கூறப்பட்டது.

பெண்ணின் சம்மதத்துடனே பாலுறவு கொண்டதால் அது வல்லுறவல்ல என்று அசாஞ்சே மறுத்து வந்திருக்கிறார்.

அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளியிட்டதற்கு பழிவாங்கவே புகார் சுமத்தப்பட்டதாக அவர் கூறினார்.

ஸ்விஸ் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த நகர்வுகள் லண்டனில் நடக்குமென விகிலீக்ஸ் டுவீட் செய்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி: ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்