இரானில் பழமைவாதியை தோற்கடித்த மிதவாதி; மீண்டும் அதிபரானார் ஹசன் ரூஹானி

  • 20 மே 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரண்டாவது முறையாக இரானின் அதிபரானார் ஹசன் ரூஹானி

இரான் அதிபர் ஹசன் ரூஹானி, அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவான சுமார் 40 மில்லியன் வாக்குகளில், இதுவரை எண்ணப்பட்டதில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை ரூஹானி பெற்றுள்ளதாகவும், சில பகுதிகளில் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தொலைக்காட்சியில் அறிவித்தனர்.

மிதவாத தலைவராக அறியப்படும் ரூஹானி உலக முன்னணி நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி இரானின் அணு திட்டங்களை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டார்.

வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடத்திருப்பதாக ரூஹானியின் போட்டி வேட்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரூஹானியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையங்களில் ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்று ரூஹானியின் பழமைவாத போட்டியாளரான இப்ராகிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவ்வாறு வாக்குச்சாவடிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவதென்பது தேர்தல் சட்டத்திட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

இன்னும் நகர்ப்புற பகுதிகளிலிருந்து தேர்தல் முடிவுகள் வெளிவரவில்லை. ஆனால், அவை ரூஹானிக்கே ஆதரவாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதிபர் தேர்தலில் ரூஹானி வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசு தொலைக்காட்சி அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

தற்போது வாக்கு எண்ணும் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், ரூஹானி 58.6% வாக்குகளை பெற்றுள்ளார்.

ரைசி 39.8% வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்

ஜி.எஸ்.டியில் பூஜ்ஜியம் வரி விதிக்கப்படும் பொருட்கள் என்ன?

பாம்பு வாயில் முத்தம்

வைரவிழாவில் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார்: மு.க. ஸ்டாலின்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்