ஆப்கனில் முழுக்க முழுக்க பெண்களால் தொடங்கவிருக்கும் தொலைக்காட்சி சேனல்

ஆப்கன் தொலைக்காட்சி நேயர்கள் முழுக்க முழுக்க பெண்களால் தயாரித்து வழங்கப்படும் `சான் டீவி என்ற தொலைக்காட்சி சேனலை காண முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images

16 வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வீழ்ச்சியை சந்தித்ததிலிருந்து பெண்களின் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை இந்த ’சான் டிவி’ வெளிப்படுத்தும் என இந்த ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காபூல் நகர் முழுவதும், பெயர் பலகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகப்படியான பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த முயற்சியில் சவால்கள் நிறைந்திருக்கும் ஆனால் பெண்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என சான் சேனலில் நிகழ்ச்சி வழங்குபவர்களில் ஒருவரான ஷமிலா ரசோலி கூறுகிறார்.

மேலும் மற்றொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொலைக்காட்சியில் தான் பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்ததால் தனது குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும், தொலைக்காட்சியில் பணியாற்ற அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு காபூலில் உள்ள ஒரு சிறிய ஸ்டூடியோவிலிருந்து தொடங்கவுள்ளது.

குடும்பச் சண்டையில் ஆப்கான் பெண்ணின் காதுகளை அறுத்த கணவர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்