எவெரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் மூவர் பலி, ஒருவர் காணவில்லை

எவெரெஸ்ட் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிகரத்தில் துயரம்

மிகவும் கடுமையான சூழ்நிலைகள் நிலவிய வார இறுதியில், எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயன்ற மூன்று மலையேறும் வீர்ர்கள் இறந்துவிட்டனர். மேலும் ஒருவரைக் காணவில்லை.

எவெரெஸ்ட் சிகரத்தை எட்ட திபெத்திய பக்கத்திலிருந்து ஏறிய ஒரு ஆஸ்திரேலிய மலையேறி கொல்லப்பட்டார். நேபாள பகுதியிலிருந்து ஏற முயன்ற ஒரு ஸ்லோவாக்கிய வீர்ரும், அமெரிக்க மலையேறி ஒருவரும் வார இறுதியில் இறந்தனர்.

இந்தியாவிலிருந்து மலையேறச் சென்ற மற்றொருவரை மீட்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

இந்த இந்தியர் எவெரெஸ்ட் சிகரத்தை எட்டியபின்னர் காணாமல் போய்விட்டார். அவருடன் சென்ற நேபாளி வழிகாட்டி, சுமார் 8000 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் முகாம்-4ல் கடும் பனிக்காயங்களுடன் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டார்.

அடுத்த மாதம் பருவ மழை வருவதற்கு முன்னர் கிடைத்திருக்கும் இந்த இடைவெளியில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை அடைய நூற்றுக்கணக்கான மலையேறிகள் முயன்று வருகின்றனர்.

தொடர்பான செய்திகள்:

எவெரெஸ்ட் சிகரம் தொட்ட தம்பதிகளின் சாதனை உண்மையா

எவெரெஸ்ட் சிகரம் அருகே பனி ஏரி உருகுகிறது - பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்

இதுவும் படிக்கலாம்:

பரபரப்பான 1 ரன் வெற்றி: மும்பை அணிக்கு ஐபிஎல் கோப்பை சாத்தியமானது எப்படி?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்