இஸ்ரேல் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொல்டு டிரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயணத்தில், சௌதி அரேபியாவை அடுத்து தற்போதுஇஸ்ரேலை வந்தடைந்துவிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான சௌதி அரேபியாவில் இஸ்லாமிய தலைவர்களிடம் பேசிய பிறகு, விமானம் மூலம் இஸ்ரேல் வந்தடைந்தார்.

தனது இரண்டு நாள் பயணத்தில், டிரம்ப் இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இஸ்ரேலிய-பாலத்தீன தரப்புகளுக்கிடையே ஏற்படக்கூடிய ஒரு அமைதி ஒப்பந்தத்தை ''இறுதி ஒப்பந்தம்'' என்று அதிபர் டிரம்ப் கூறியி்ருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தம் எந்த வடிவை எடுக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இல்லை.

இரு நாடுகளும் அவர்களுக்குள் நேரடியான பேச்சுவார்த்தை நடத்தி அதை முடிவு செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

டெல் அவிவ் வந்து சேர்ந்ததும் அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ''இணக்கம், செழிப்பு மற்றும் அமைதி " ஆகியவை நிலவும் ஒரு சகாப்தத்தில், ஒன்றாக இணைந்து வேலை செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சௌதி அரேபியாவில் இருந்து இஸ்ரேலுக்கு டிரம்ப் வந்த விமானம்தான் இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்த முதல் விமான பயணமாக இருக்கும் ; இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் ராஜீய உறவுகள் இல்லை .

ஒன்றாக இணைந்து வேலைசெய்வதன் மூலம் தீவிரவாதத்தை தோற்கடித்து, இப்பிராந்தியத்துக்கு அமைதியைக் கொண்டு வர ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கு வந்தவுடன் பேசிய உரையில் டிரம்ப் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

சௌதி அரேபியாவில் இருந்து வந்துள்ள டிரம்ப், சௌதியில் இஸ்லாமிய நாடுகளின் பல தலைவர்களை சந்தித்திருந்தார்.

அமெரிக்க அதிபரை வரவேற்ற இஸ்ரேலிய தலைவர் பெஞ்சமின் நெதன்யாஹு அமைதி தொடர்பான அவரது அர்ப்பணிப்பை தானும் பகிர்வதாக தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலத்தீனம் மோதலின் இரு பக்கமும் உள்ள இரு தரப்பினர், இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆழமான சந்தேகம் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்:

தீவிரவாதத்தை விரட்டியடிக்க முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

சவுதி அரேபியாவில் முக்கிய உரையாற்றவுள்ள டொனால்ட் டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்