பெண்களே உஷார்: பீரும், ஒயினும் அரை கிளாஸ் குடித்தாலும் மார்பக புற்றுநோய் ஆபத்து!

  • 25 மே 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தினமும் அரை கோப்பை ஒயின் அல்லது ஒரு குட்டி பீர் அருந்துவது மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது

மதுபானம் அருந்தும் பழக்கம் உடைய பெண்கள் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிகரித்த ஆபத்து ஆகியன இடையே உள்ள தொடர்பிற்கு மேலும் சில ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமும் அரை கோப்பை ஒயின் அல்லது சிறிதளவு பீர் அருந்துவது மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் ஓர் அறிக்கை கூறுகிறது.

அதேசமயம், வழக்கமான தீவிர உடற்பயிற்சி மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது என்ற ஆராய்ச்சியை ஆதரிக்கிறது.

ஆனால், உண்மையில் அது அவ்வளவு எளிதானதா ?

பிரிட்டனில் உள்ள பெண்களுக்கு இருக்கும் மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது. தங்களுடைய வாழ்நாளில் எட்டு பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆனால், சிலருக்கு ஏன் புற்றுநோய் உருவாகிறது என்பதையும், பிறருக்கு ஏன் உருவாகவில்லை என்பதற்கும் சரியான விளக்கத்தை விஞ்ஞானிகளால் அளிக்க முடியவில்லை.

புற்றுநோய் ஏற்படுவதற்கு வாழ்வியல் முறை, ஹார்மோன் அளவுகள் மற்றும் பிற மருத்துவ நிலைகள் உள்பட பல காரணிகள் மற்றும் எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குடும்பத்தில் மார்பக புற்றுநோயால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நோய் உங்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகம்

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள் என்னென்ன ?

தொடக்கத்தில், நீங்கள் கட்டுப்படுத்த முடியாத சில காரணிகள் இருக்கின்றன. அதில், பாலினம், வயது, உயரம், மரபணுக்கள் மற்றும் உங்களுடைய மாதவிடாய் காலம் எப்போது தொடங்கியது போன்ற விஷயங்கள் அடங்கும்.

50 வயதை கடந்த பெண்ணாக மாதவிடாய் காலத்தை கடந்தவராக இருக்கும் பட்சத்தில், உங்களது குடும்பத்தில் மார்பக புற்றுநோயால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நோய் உங்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாகவே இருக்கின்றது.

உயரமாக இருத்தல் மற்றும் 12 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் காலம் தொடங்கினாலும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருக்கின்றது.

புற்றுநோய் ஏற்படுவதற்கான 18 வித்தியாச காரணிகளை பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதில், மதுபானம் ஓர் அம்சம் மட்டுமே.

என்ன சொல்கிறது இந்த அய்வு அறிக்கை ?

உணவு கட்டுப்பாடு, எடை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க பெண்களுக்கு வழிகள் உள்ளன என்று அது கூறுகிறது.

12 மில்லியன் பெண்களின் மருத்துவ குறிப்புகளை ஆய்வு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகளை பகுப்பாய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிக்கை தற்போதைய ஆலோசனையை ஆதரிக்கும் விதமாக மதுபானம் அருந்துவதில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்திகிறது.

சிறிய கிளாஸ் கோப்பையில் தினந்தோறும் கூடுதல் அளவு அதாவது 10 கிராம் ஆல்கஹால் தினந்தோறும் அருந்துவதால் மாதவிடாய் காலத்திற்கு பிறகு 9 சதவிகித பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதற்கான ஆதாரங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மிதிவண்டி ஓட்டுவது அல்லது ஓடுவது போன்ற மிகக் கடுமையான பயிற்சிகள் மாதவிடாய் காலத்திற்கு பிறகு உற்சாகம் குறைந்த பெண்களை காட்டிலும் மார்பக புற்றுநோய் வராமல் இருப்பதற்கான அபாயம் பத்து சதவிதம் குறைவு.

உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டால் என்ன பயன் ?

உடற்பயிற்சி என்று வரும்போது, மிதிவண்டி ஓட்டுவது அல்லது ஓடுவது போன்ற மிகக் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு, அவ்வாறு பயிற்சி செய்யாத பெண்களைவிட, மாதவிடாய் காலத்திற்கு பிறகு மார்பக புற்றுநோய் வராமல் இருப்பதற்கான அபாயம் பத்து சதவிதம் குறைவு.

தாய்ப்பால் புகட்டுவது மாதவிடாய் காலத்திற்கு முன்பும், பின்பும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.

பொதுவாக, பரவலாகக் காணப்படும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை கீரை போன்ற காய்கறிகள் உண்பதால் குறையும் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

பரிந்துரைக்கப்படும் மதுபான அளவு என்ன ?

2016 ஆம் ஆண்டில் இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு வாரத்தில் ஆண் மற்றும் பெண் 14 யூனிட்களுக்கு மேல் மதுபானம் அருந்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 யூனிட்கள் என்பது 6 பின்ட் பீர் அல்லது ஏழு கிளாஸ் ஒயினுக்கு சமமானது.

இதுமட்டுமின்றி, சில நாட்களில் மதுபானங்களை தொடக்கூடாது என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானம் எந்த அளவு அருந்தினாலும் அது புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என்ற ஆய்வை மையப்படுத்தி பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனை இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணிகள் நிச்சயமாக மதுபானம் அருந்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

பிரிட்டனில் சமீபத்திய வரலாற்றில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்த ஓர் பார்வை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்