“ஆண்கள் வெறும் குப்பைகள்” ஆப்ரிக்க பெண்களின் சீற்றத்துக்கு பெருகும் ஆண்களின் ஆதரவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“ஆண்கள் வெறும் குப்பைகள்” ஆப்ரிக்க பெண்களின் சீற்றத்துக்கு பெருகும் ஆண்களின் ஆதரவு

கடந்த சில வாரங்களில் தென் ஆப்ரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைத்தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ஒரு நாளைக்கு மூன்று பெண்கள் தமது துணைவர்களாலேயே கொல்லப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இப்படி கொல்லப்படும் சிலர் உருவமே தெரியாத அளவுக்கு கொடூரமாக எரித்துக்கொல்லப்படுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பெரும்பான்மையானவை குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாலேயே நடப்பதாக இந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எனவே பெண்களுக்கு சொந்த வீடுகளுக்குள்ளேயே கூட பாதுகாப்பு இல்லை என்கிற சூழல் நிலவுகிறது.

பெண்களுக்கு எதிரான இந்த கொடூர குற்றங்களுக்கு எதிரான கோபம் சமூக ஊடகங்களில் men are trash, அதாவது ஆண்கள் குப்பைகள் என்கிற ஹாஷ்டேக் மூலம் தீயாய் பரவியது.

இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு பிரச்சனைக்கு ஆண்களே பொறுப்பு என்பதை மையப்படுத்திய விவாதங்கள் நாடளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்