லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு

மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மத்திய லண்டனில் குவிக்கப்படும் இராணுவத்தினர்.

நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மத்திய லண்டனின் சாலைகளில் இராணுவத்தினர் ரோந்துவர ஆரம்பித்துள்ளது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எமது செயதியாளர் கூறகிறார்

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், பிரதமரின் இல்லமான 10 டவுணிங் வீதி மற்றும் இதர முக்கிய அரச கட்டடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரதமரின் இல்லத்தின் முன்புறம் காவலில் இராணுவத்தினர்

இதுவரை அந்தப் பணிகளில் இருந்த ஆயுதப்படை காவல்துறையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, பிரிட்டனின் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை-கடுமை என்பதிலிருந்து மிகவும் தீவிரம் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரிட்டனின் பாதுகாப்பு அதியுயர் உஷார் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது

தற்போது லண்டனில் மட்டும் பாதுகாப்புப் பணிகளுக்கான 4000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே மான்செஸ்டர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் மேலும் முற்றுகையிட்டு சோதனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்