1971-இல் விடுவிப்பு: 2017-இல் மீண்டும் வழக்கு விசாரணை

  • 25 மே 2017

பிரிட்டனில் பிறந்த ஒரு தத்து குழந்தையை, கடந்த 1970-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கொல்லப்பட்ட குழந்தை இடம் குறித்து முன்னதாக ஒரு முறை தகவல் தெரிவித்தது தற்போது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை NSW POLICE
Image caption 3 வயதில் காணாமல் போன குழந்தை செரில் கிரிம்மர்

நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் இருந்த ஒரு குளியலறை கட்டடத்திலிருந்து மூன்று வயதான செறில் கிரிம்மர் என்ற குழந்தை காணாமல் போயிருந்தது.

கடந்த மார்ச் மாதம் பிரிட்டனை பூர்விகமாக கொண்ட 63 வயது நபரொருவர், செறில் கிரிம்மரின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இந்நபர், 1971-ஆம் ஆண்டிலேயே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையும், ஆனால் அப்போது அவர் கூறியதை போலீசார் நம்பவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

சம்பவம் நடந்த போது 17 வயதான குற்றம்சாட்டப்பட்ட நபர், இறந்த குழந்தையின் சடலம் இருக்கக்கூடும் என்று அந்த இடம் குறித்தும் முன்னரே தகவல் அளித்திருந்தது, புதன்கிழமையன்று உலன்காங் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

ஆரம்பத்தில் இவர் தெரிவித்த தகவல் சரியாக இருக்காது என்று கருதி அதனை மறுத்து போலீசார் தள்ளுபடி செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Image copyrightNSW POLICE
Image caption குழந்தை செரில் கிரிம்மர் காணமல் போன கடற்கரை

குற்றம்சாட்டப்பட்ட நபர், அக்காலகட்டத்தில் முதிரா வயதில் (மைனர்) இருந்ததால் அவரது பெயரை குறிப்பிடமுடியாது.

செறில் கிரிம்மரின் சடலம் கண்டறியப்படும் என்று தாங்கள் நம்பவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞரான லாரா ஃபெனல், குற்றம்சாட்டப்பட்ட நபர் மைனர் வயதில் இருந்த போது மனநலன் தொடர்புடைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததால் இது குறித்த புதிய ஆதாரங்கள் ஏற்புடையதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஆதாரங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தார்.

தனக்கு குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டோ அல்லது மறுத்தோ எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

பிற செய்திகள் :

பீரும், ஒயினும் அரை கிளாஸ் குடித்தாலும் ஆபத்து!

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்