மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு

  • 28 மே 2017
படத்தின் காப்புரிமை GREATER MANCHESTER POLICE

பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் அரங்கத்தில் இரவில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொலை செய்த தற்கொலை குண்டுதாரி சல்மான் அபெடியின் சிசிடிவி புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதக் குற்றங்களை இழைத்ததான சந்தேகத்தின் பேரில், 11 ஆண்கள் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடந்த இரண்டு மணி நேரத்தில் அபெடியின் அடையாளம் அறியப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் அச்சுறுத்தல் நிலை நெருக்கடி என்ற கட்டத்திலிருந்து கடுமையான நிலை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எஃப்.ஏ கோப்பையின் இறுதி போட்டிக்காக வெம்ப்ளி மைதானத்தில் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், போலீஸாருக்கு ஆதரவுதரும் விதமாக நிலை நிறுத்தப்பட்ட படையினர் வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) காலை கோப்ரா எனப்படும் அரசாங்கத்தின் அவசர குழு கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் அதற்கு தலைமை தாங்கியபின் இந்த அறிவிப்புகளை பிரதமர் தெரீசா மே வெளியிட்டார்.

எஃப்.ஏ கோப்பையின் இறுதி போட்டிக்காக வெம்ப்ளி மைதானத்திலும், ஸ்காட்டிஷ் கோப்பைக்காக ஹம்ப்டென் பூங்காவிலும், ஆவீவா ப்ரீமியர்ஷிப் ரக்பி இறுதி போட்டிக்காக டிவிக்கென்ஹாமிலும் பாதுகாப்பு கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

பெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்