வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குநர் ராஜினாமா

படத்தின் காப்புரிமை BLACK ROCK GROUP
Image caption மைக் துப்கே

மூன்று மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால், வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குனராக நியமிக்கப்பட்ட மைக் துப்கே பதவியை ராஜினாமா செய்தார்.

குடியரசுக் கட்சியின் உத்தியியலாளர் மைக் துப்கே வெள்ளை மாளிகை ஊடக செயல்பாடுகளை சீரமைக்கும் விதமாக பணியமர்த்தப்பட்டார்.

மைக் துப்கேவின் திடீர் பதவி விலகலை அடுத்து, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சீன் ஸ்பைசர், துப்கேவின் பணியையும் மேற்கொள்வார், ஆனால் ஊடக சந்திப்புகள் குறைவாகவே இருக்கும்.

வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு குழுவில் ஒழுங்கற்ற நிலை நிலவியதால் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணியில் இருந்து மைக் துப்கே விலகுவதை முதலில் வெளியிட்ட ஆக்ஸியாஸ் (Axios) அரசியல் வலைதளம், அவர் இயல்பான நல்ல நிலையிலேயே விலகுவதாக தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு பற்றி அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினசரி செய்தியாளர் சந்திப்பு நடைமுறையை மாற்ரி, அவரே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்றாக செய்தி வெளியிடும் முறையை கொண்டுவர டிரம்ப் முன்னர் யோசனை தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

ரஷியாவிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்தது சரியே: டிரம்ப்

உளவுத்துறை இயக்குநரை பணி நீக்கம் செய்த டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்