காபூலில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு

  • 31 மே 2017

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று நேரத்துக்கு முன்பு பெருமளவிலான குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதிபர் மாளிகை மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்தக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாகக் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், சம்பவம் நடந்த இடத்திலிருந்து பல நூறு மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வீடுகளில் கூட வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு காரணமாக, நகரில் கரும் புகை மூட்டம் ஏற்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.

பலர் படுகாயமடைந்து மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதாகவும் அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஹருண் நஸாஃபிஜாதா தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மத்திய சதுக்கத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அந்த இடத்தில் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்பு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூலில் சமீப மாதங்களில், அடிக்கடி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிரவரம் மோசமடைந்து வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.

இந்த மாதத் துவக்கத்தில், அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்து சென்றபோது, நேடோ படையணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்