பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு புதிய உடன்படிக்கையை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஒப்புக்கொள்ளும் என்று வெள்ளை மாளிகளியில் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார்.

'' அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது, அமெரிக்காவை தண்டிக்கும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொள்ளமுடியாது,'' என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் பற்றி தனது வார்த்தைகளில் டிரம்ப் தெரிவித்தார்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தனது தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்த முடிவு அமெரிக்காவின் இறையாண்மை மீது எதிர்காலத்தில் ஏற்படும் ஊடுருவல்களில் இருந்து பாதுகாக்கும் என்றார்.

மனிதர்களின் செயல்களால் உலக வெப்பமயமாதல் ஏற்பட்டது என்ற அறிவியல் கருத்துக்கு அவர் சவால் விடவில்லை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலைகளின் விளைவுகள் பற்றியும் குறிப்பிடவில்லை.

இதையும் படிக்கலாம்:

இலங்கையில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த வன உயிரினங்கள்

சென்னையில் பெரும் தீ விபத்து; கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராட்டம்

இலங்கை வெள்ளம்: ஹெலிகாப்டரில் குழந்தை பெற்றெடுத்த பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்