மணிலா ஹோட்டல் வளாகத் தாக்குதல்; 36 உடல்கள் மீட்பு

நேற்றிரவு நேரத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள ஒரு கேசினோவிலும், ஹோட்டல் வளாகத்திலும் துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து குறைந்தது 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை EPA

அந்த நபர் கேசினோவின் மேசைகளுக்கு தீ வைத்ததால் ஏற்பட்ட செறிந்த அமில புகையால் மூச்சுத்திணறி பலர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

எந்த நாட்டை சோந்தவர் என்று இதுவரை தெரியாத இந்த துப்பாக்கிதாரி, வேல்டு மணிலா ரிசாட்ஸிலுள்ள கேசினோவில் வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார்.

அந்த தாக்குதல்தாரி தனக்குதானே தீ வைத்து மாண்டதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

முதலில் யாரும் இறக்கவில்லை என்று கூறிய அதிகாரிகள், துப்பாக்கிதாரியின் உடலை கண்டெடுத்த பின்னர் அந்த வளாகத்தை துப்பரவு செய்தபோதுதான், இறந்தோரின் உடல்களைக் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Philippine Police

இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் வெளிப்படையாக தெரிவித்திருக்கும் நிலையிலும், இந்த நிகழ்வு தீவிரவாதத்தோடு தொடர்புடையது அல்ல என்றும், திருடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தாக்குதல் வெளியே தெரிய வந்தது எப்படி?

நள்ளிரவுக்கு சற்று பின்னர் காசினோவில் நுழைந்த இன்னும் பெயர் தெரியாத நபர் ஒருவர், தான் வைத்திருந்த தாக்குதல் துப்பாக்கி கொண்டு சுடத் தொடங்கியதும், அங்கு பீதி பரவியுள்ளது.

அதிபருக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி

அவர் வானத்தை நோக்கிதான் சுட்டுள்ளார். மக்களை குறிவைத்து சுடவில்லை. ஆனாலும், பீதி ஏற்பட்டது என்று தென்னக போலீஸ் மாவட்ட கண்காணிப்பாளர் தாமஸ் அபோலினாரியோ பிபிசியிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

"எங்களிடம் காயமடைந்த சிலரும், இறந்தோர் சிலரின் உடல்களும் உள்ளன. ஆனால், யார் மீதும் துப்பாக்கி குண்டு காயங்கள் இல்லை" என்று அவர் கூறினார்.

விளையாட்டு மேசைகளை தீ வைத்து கொளுத்திய அந்த துப்பாக்கிதாரி. 113 மில்லியன் பிலிப்பைன்ஸ் பெஸ்ஸோ மதிப்புடைய விளையாட்டு சில்லுகளை தன்னுடைய முதுகு பையில் நிறைத்தார்.

ஐநாவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்

பின்னர் அவர் அந்த வளாகத்தின் ஹோட்டல் பகுதிக்குள் புகுந்து, அவருடைய முதுகுப்பையை விட்டுவிட்டு ஒரு அறைக்குள் நுழைந்தார்.

"அங்கிருந்த படுக்கையில் படுத்த அவர், கன்மானதொரு படுக்கை விரிப்பால் தன்னை மூடிக்கொண்டார். அந்த படுக்கை விரிப்பு பெட்ரோல் ஊற்றியதுபோல தோன்றியது. பின்னர் அவர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார்" என்று தேசிய காவல்துறை தலைவர் ரோனால்ட் டெலா ரோசா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Basilio H. Sepe/Getty Images

இந்த துப்பாக்கி தாக்குதலால் அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேடுதல் வேட்டை துவங்கியது. தாக்குதல்தாரியின் உடலை கண்டெடுத்த பின்னர் அது முடிந்தது.

அந்த மனிதர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட பின்னர், தன்னே சுட்டு கொண்டார் என்றும் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்றும் வெல்டு மணிலா ரிசார்ட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

உயிருக்கு ஆபத்து என்கிறார் பிலிப்பைன்ஸ் செனட்டர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உயிருக்கு ஆபத்து என்கிறார் பிலிப்பைன்ஸ் செனட்டர்

துப்பாக்கிதாரி யார்?

கறுப்புநிற ஆடையணிந்து, தன்னுடைய துப்பாக்கியை ஏந்தி நிற்கும் இந்த மனிதரின் கண்காணிப்பு கேமரா பிடித்திருந்த படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது.

அந்த மனிதர் நன்றாக ஆங்கிலம் பேசியதால், அவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற அனுமானம் உள்ளூர் ஊடகங்களிடமும், சில அதிகாரிகளிடமும் உள்ளது. அவர் காக்கஸ் பகுதியை சேர்ந்தவரை போல தோன்றியதாக தொடக்க தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், தாக்குதல்தாரி எந்த நாட்டை சேர்ந்தவர் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கண்காணிப்பாளர் அபோலினாரியோ பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த மனிதர் மனநிலை பாதிக்கப்பட்டவரைபோல தோன்றியதாக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Basilio H. Sepe/Getty Images

இந்த கேசினோவில் நடத்தப்பட்ட தாக்குதல், மனநிலை குழப்பிய ஒருவரின் கோழைத்தனமான நடவடிக்கை என்று 'வேல்டு மணிலா ரிசாட்ஸ்' விவரித்துள்ளது.

இஸ்லாமியவாதக் குழுவோடு தொடர்பின்றி, அந்த துப்பாக்கிதாரி தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தெரிவிக்கிறது.

கடந்த வாரம் தான் பிலிப்பைஸின் தொலைதூரத்தில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளோடு கூட்டணியிலுள்ள தீவிரவாதிகள் தெரு சண்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதிக பேர் இறந்தது எப்படி?

மர சாதனங்கள் மற்றும் கம்பளிகள் உடனடியாக தீ பற்றுவதற்கு இந்த சந்தேக நபர் பெட்ரோலை ஊற்றியிருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது. இந்த தீ மிகவும் பெரிதாக இல்லாவிட்டாலும். மிகவும் செறிவான புகை அதிகம் பேர் இறக்க காரணமாகியுள்ளது.

இந்த காசினோவில் இருந்து தப்பித்தவர்கள், அந்த வளாகம் புகை நிறைந்து காணப்பட்டதாக தெருவித்திருகின்றனர்.

எலும்பு முறிவு உள்பட, 50க்கு மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேவாலயத்துடன் மோதும் பிலிப்பைன்ஸ் அதிபர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தேவாலயத்துடன் மோதும் பிலிப்பைன்ஸ் அதிபர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்