சர்வதேச எழுத்து கூட்டும் போட்டியில் சாதித்து காட்டிய இந்திய வம்சாவளி சிறுமி

பட மூலாதாரம், Getty Images
கலிஃபோர்னியாவை சேர்ந்த 12 வயது இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் வாஷிங்டனில் நடைபெற்ற `ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ` (Scripps National Spelling Bee)எனப்படும் ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளை சரியாகச் சொல்லும் போட்டியின் பரபரப்பான் இறுதி சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
ஃபெரெஸ்நோவை சேர்ந்தவர் அனன்யா வினய், `மாரோகெயின்` ( marocain ) என்ற வார்த்தையை சரியாக எழுத்துகூட்டி ஓக்லஹோமாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ரோஹன் ராஜீவ்வை வீழ்த்தினார்.
இரு போட்டியாளர்களும் பெரும்பாலான வார்த்தைகளை சரியாக உச்சரித்தனர். யார் தவறிழைப்பார்கள் என்று ஒருவரை ஒருவர் மற்றவர்களுக்காக காத்திருந்தனர்.
ஆனால், மராம் (marram) என்ற சொல்லை ரோஹன் தவறாக உச்சரிக்க, அனன்னயா இரு வார்த்தைகளை சரியாக கூறி போட்டியில் வெற்றி பெற்றார்.
தனது வெற்றியை தொடர்ந்து வியப்பை உணர்ந்ததாக கூறும் அனன்யா, '' இது எவ்வளவு தூரம் போகிறது என்பதை பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.'' என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அனன்யாவின் தந்தை வினய் ஸ்ரீகுமார், அனன்யாவிற்கு வாசிப்பு மீது தீவிரமான ஆர்வம் உள்ளது என்றார்.
ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய - அமெரிக்க பிரஜை ஒருவர் வெல்வது 13வது முறையாகும்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் 40,000 டாலர்கள் பரிசுத்தொகையை பெற்றுள்ள அனன்யா, பரிசுத்தொகையில் சரி பாதியை தனது ஏழு வயது சகோதரருடன் பங்கிட உள்ளதாகவும், தன்னுடைய பங்கை தனது கல்லூரி படிப்பிற்காக வங்கிக் கணக்கில் சேமிக்க உள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலிருந்தும், அமெரிக்க பிராந்தியங்களான போர்டோ ரீகோ மற்றும் குவாம், ஜப்பான் மற்றும் ஜமைக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும் 11 மில்லியனுக்கு அதிகமான இளம் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட இளம் போட்டியாளர் எடித் ஃபுல்லெர். ஓக்லஹோமாவின் துல்சா பகுதியை சேர்ந்தவர். ஏப்ரல் மாதம் வந்த போது அவர் 6 வயதை எட்டினார். கடந்த வாரம்தான் போட்டியிலிருந்து ஃபுல்லெர் நீக்கப்பட்டார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்