லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : எட்டு முக்கிய தகவல்கள்

  • 4 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை Getty Images
  • லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களையடுத்து பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்களை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
  • வேகமாக சென்ற வேன் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியது. தொடர்ந்து, சந்தேக நபர்கள் வேனிலிருந்து வெளியேறி பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்தினர்.
  • தாக்குதல்தாரிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • பொது மக்களில் 48 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • லண்டன் பிரிட்ஜ் ரயில்வே நிலையம் மூடப்பட்டுள்ளது.
  • இன்று நள்ளிரவு வரை வரை லண்டன் பிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • வாக்ஸ்ஹால் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்றிற்கும் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஓர் அவசர அலுவலகத்தை போலீஸார் அமைத்துள்ளனர். அவர்களை 0800 096 1233 மற்றும் 020 7158 0197 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள் :

லண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 6 பேர் கொலை, 20 பேர் காயம்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் - புகைப்படத் தொகுப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விடுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் போலீஸார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்