லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தெரீசா மே அறிவிப்பு

லண்டன் பிரிட்ஜில் "அப்பாவி மற்றும் நிராயுதபாணி பொதுமக்களின்" மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, "இதுவரை நடந்தது போதும் என்று கூறும் நேரமிது" என தெரிவித்துள்ளார்.

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என மே அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்த தாக்குதலில் இதுவரை, 7 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமையன்று, பிரிட்டன் நேரப்படி இரவு 11 மணிக்கு, லண்டன் பிரிட்ஜில் வெள்ளை நிற வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதியது மேலும், அதிலிருந்து மூன்று பேர் வெளியே வந்து அருகாமையில் பரோ மார்க்கெட்டிலிருந்தவர்களை கத்தியால் குத்தினர்

தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரும் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்தனர்; மேலும் அவர்கள் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

லண்டனின் கிழக்கு பகுதியிலிருக்கும் பார்கிங் போலிஸாரால் சோதனைகள் நடத்தப்பட்டது மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த பிற செய்திள்:

பிரிட்டனில் மூன்று மாதங்களில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது. மார்ச் மாதம் வெஸ்ட்மினிஸ்டரில் காரை ஏற்றி மற்றும் கத்தியால் குத்தி நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர் மேலும் இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்தில் மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

பல அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தற்காலிமாக நிறுத்தியுள்ளனர். ஆனால், முழுநேர தேர்தல் பிரசாரங்கள் திங்களன்று மீண்டும் தொடங்கும் எனவும் திட்டமிட்டப்படி வியாழனன்று தேர்தல் நடைபெறும் என்றும் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்