லண்டன் பயங்கரவாத தாக்குதல்: 12 பேர் கைது

7 பேர் பலியாக காரணமான லண்டன் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

காயமடைந்தோருக்கு உதவி

மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : விடுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் போலீஸார்

காணொளிக் குறிப்பு,

விடுதியில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் போலீஸார்

மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை கண்டித்துள்ள பிரதமர் தெரீசா மே "இதுவரை நடந்தது போதும் என்று கூறும் நேரமிது" என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

5 பேரை பலி வாங்கிய வெஸ்ட்மினிஸ்டரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கார் மற்றும் கத்துக்குத்து தாக்குதலையும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் 22 பேரை பலிவாங்கிய மான்செஸ்டர் குண்டுவெடிப்பையும் தொடர்ந்து, ஐக்கிய ராஜ்ஜியத்தில் மூன்று மாதங்களில் நடைபெறும் 3-ஆவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேசிய பொது தேர்தலுக்கான பரப்புரையை இடைநிறுத்தியுள்ளன.

ஆனால், தேர்தல் பரப்புரை திங்கள்கிழமை முழுவீச்சில் தொடரும் என்று தெரிவித்துள்ள பிரதமர் தெரீசா மே, திட்டமிட்டப்படி வியாழக்கிழமை பொது தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்கலாம்:

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய வெள்ளை வேன்

காணொளிக் குறிப்பு,

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய வேன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்