பயங்கரவாதத்துக்கு எதிரான அணுகுமுறையை மறு ஆய்வு செய்யும் பிரிட்டிஷ் போலிஸார்

பயங்கரவாதத்துக்கு எதிரான அணுகுமுறையை மறு ஆய்வு செய்யும் பிரிட்டிஷ் போலிஸார்

பிரிட்டனின் மூன்று மாதத்தில் அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளதை அடுத்து பயங்கரவாதத்துக்கு எதிரான தமது அணுகுமுறையின் அனைத்து அம்சங்களையும் தமது போலிஸ் படை மறு ஆய்வு செய்யும் என்று லண்டன் போலிஸ் தலைவி கிரெஸிடா டிக் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை லண்டன் பிரிட்ஜ் பகுதியில் மூன்று பேர் தமது வானை பொதுமக்கள் மீது வேண்டுமென்றே மோதியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

போலியான தற்கொலை அங்கியை அணிந்திருந்த அவர்கள் வண்டியில் இருந்து குதித்து, அருகே பரபரப்பான பரோ மார்க்கட் பகுதியில் ஆட்களை கத்தியால் தாக்க, போலிஸார் தாக்குதலாளிகளை சுட்டுக்கொன்றார்கள்.

பதினெட்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தமது புலனாய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தாக்குதலாளிகளை தமக்கு தெரியும் என்றும் போலிஸார் கூறுகிறார்கள். அவர்களில் ஒருவர் மொரோக்கோ நாட்டவர் என்று நம்பப்படுகின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.