மத்திய கிழக்கில் மற்றொரு மோதல்: டொனாட்ல் ட்ரம்ப் காரணமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சௌதி கட்டார் மோதல்: டொனால்ட் ட்ரம்ப் காரணமா?

சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான தமது அனைத்து ராஜீய உறவுகளையும் முறித்துக்கொண்டிருக்கின்றன.

கட்டார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளன.

இஸ்லாமிய அரசு, அல்கையீதா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் கட்டார் நெருக்கமாக இருப்பதாக சௌதி அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களுமே பொய் என்று கட்டார் மறுத்துள்ளது.

கட்டார் ராஜீய அதிகாரிகளை வெளியேற்றுவதாக வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது எதிஹாட் விமானங்கள் இனிமேல் தோஹாவுக்கு பறக்காது என்று அறிவித்துள்ளது.

தனது அண்டைநாடுகளின் திடீர் முடிவால் கட்டார் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ராஜீய மோதல் அந்த பிராந்தியத்தில் என்னமாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை விளக்குகிறார் பிபிசியின் மத்திய கிழக்கு பகுப்பாய்வாளர் ஆலன் ஜான்ஸ்டன்.

தொடர்புடைய செய்தி: இஸ்ரேல் பாலஸ்தீனப்போர்: தற்காப்பா? நிலத்திருட்டா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்