மத்திய கிழக்கை மாற்றியமைத்த போர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்ரேல் பாலஸ்தீன போர்: தற்காப்பா? நிலத்திருட்டா?

50 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலுக்கும் அதன் அண்டைய அரபுநாடுகளுக்கும் இடையிலான போர் ஆறு நாட்கள் நடந்தது.

அந்தப்போரில் இஸ்ரேல் வென்றது. மத்திய கிழக்குப்பிராந்திய நாட்டு எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன.

தன்னை காத்துக்கொள்வதற்கான தற்காப்புக்கான முன் தாக்குதலை நடத்தவேண்டிய நிர்பந்தம் காரணமாகவே தான் அந்தப்போரில் இறங்கியதாக இஸ்ரேல் கூறியது.

சுற்றியுள்ள அரபுநாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து புதிய நாடாக உருவாகிக்கொண்டிருந்த தன்னை பாதுகாப்பதற்கான போர் அது என்றது இஸ்ரேல்.

ஆனால் பாலஸ்தீனியர்களோ, இஸ்ரேலின் 50 ஆண்டு ஆக்கிரமிப்பின் தொடக்கமாக அந்த போரை குறிப்பிடுகிறார்கள்.

1967 போரில் பிடித்த மேற்குக்கரை, கோலன்குன்றுகள், கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னிடமே வைத்துக்கொண்டது.

அப்போது பிடித்த காசாவிலிருந்து இஸ்ரேல் விலகினாலும் அதை பல ஆண்டுகளாக தன் கடும் முற்றுகைக்குள்ளேயே வைத்திருக்கிறது.

மேற்குக்கரை, கிழக்கு ஜெரூசலேமில் இஸ்ரேல் அரசு உருவாக்கிய குடியேற்றப்பகுதிகளில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய யூதர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மேற்குகரை இஸ்ரேல் வசம் இருப்பதை ஆதரிப்பதாகவும் அது ஆக்ரமிப்பு நடவடிக்கையல்ல என்று கருதுவதாகவும் சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.

ஆனால் பாலஸ்தீனியர்களோ இதை "நிலப்பறிப்பு" என்கின்றனர்.

தற்காப்புத் தாக்குதலா? அல்லது நிலத்திருட்டா? எதற்கான போர் அது என்பதில் ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னும் இருதரப்பும் இன்றுவரை உடன்படவில்லை.

தொடர்புடைய செய்தி:சௌதி கட்டார் மோதல்: டொனால்ட் ட்ரம்ப் காரணமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்