இஸ்ரேல் பிரச்சனை: மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும்?
இஸ்ரேல் குறித்து ஐ.நா மனித உரிமைக்கவுன்சிலின் ``காழ்ப்புணர்ச்சி`` மனப்பான்மையைக் கோடிட்டுக் காட்டும் அமெரிக்கா அதன் காரணமாக மனித உரிமைக் கவுன்சிலிலிருந்து விலகுவது பற்றி தான் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

பட மூலாதாரம், AFP
மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும் ?
ஐநா மனித உரிமைக் கவுன்சில் தான் ஆற்றி வரும் பங்கை அமெரிக்கா `கவனமாக` ஆராய்ந்து கொண்டிருப்பதாக மனித உரிமைக் கவுன்சிலுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார்.
வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தையும் பரிசீலிக்காத மனித உரிமைக் கவுன்சில், அமெரிக்கக் கூட்டாளியான இஸ்ரேலுக்கு எதிராக ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது என்ற உண்மையை ``ஏற்றுக்கொள்வது கடினமாக`` இருப்பதாக அவர் கூறினார்.
இன்று பின்னதாக ஹேலி மனித உரிமைக் கவுன்சிலில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
`இஸ்ரேலை மட்டும் தவறான அடிப்படையில் விமர்சிக்கும் பழக்கத்தை`` கவுன்சில் நிறுத்தவேண்டும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கடந்த வெள்ளிக்கிழமை எழுதிய ஒரு கட்டுரையில் ஹேலி குறிப்பிட்டார்.'
இந்த அமைப்பு செய்திருக்கும் பணிகளைப் பற்றி கோடிட்டுக் காட்டிய ஹேலி, ஆனால் `` மிக மோசமான மனித உரிமைச் செயல்பாட்டை வைத்திருக்கும்`` நாடான இரானையோ அல்லது அரசியல் கொந்தளிப்பு நிலவும் வெனிசுவேலாவில் சமீப மாதங்களில் பல டஜன் கணக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதைப் பற்றியோ போதிய அளவு விமர்சனங்கள் இல்லை.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்