லண்டன் தாக்குதலாளிகளுக்கு இறுதித்தொழுகை செய்ய முஸ்லிம் தலைவர்கள் மறுப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் தாக்குதலாளிகளுக்கு இறுதித்தொழுகை செய்ய முஸ்லிம் தலைவர்கள் மறுப்பு

லண்டன் தாக்குதலில் ஏழுபேரைக்கொன்ற மூன்று தாக்குதலாளிகள் முஸ்லிம்கள் என்பது பிரிட்டிஷ் முஸ்லிம்கள் மத்தியில் மிகப்பெரிய வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் முஸ்லிம்களில் மூத்த தலைவர்கள் தம் மதத்தின் பெயரால் செய்யப்படும் செயல்களைக்கண்டு வேதனையின் உச்சத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தனர்.

“இஸ்லாம் என்கிற போலியான அடையாளத்தோடு நம்மிடையே ஒளிந்துள்ள பயங்கரவாதம் என்கிற பேராபத்தை நம் சமூகங்களில் இருந்து அகற்றும்படி அனைத்து தரப்பு முஸ்லீம்களையும் முஸ்லிம் சமூகத்தின் பேரால் வேண்டுகிறோம்” என்றார் லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையைச் சேர்ந்த கமாண்டர் மேக் சிஸ்டி.

இவரது கருத்தை கேண்டர்பரி பேராயரும் ஆமோதித்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தின் பெயரால் வன்முறை நடந்தால் அதற்கான எதிர்ப்பை கிறிஸ்தவத் தலைவர்கள் முன்னெடுக்கவேண்டும் என்பதைப்போலவே பிரிட்டிஷ் முஸ்லிம்களும் தம் எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“இத்தகைய வன்முறைகளுக்கும் கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்வதன் மூலம், இது எங்கிருந்து உருவாகிறது என்கிற கடினமான கேள்வியை நாம் தவிர்க்கப்பார்க்கிறோம். நம் மதம் குறித்த அடிப்படை உண்மையை, அதே மதத்தின் ஒரு அங்கம் எப்படி மோசமாக திரித்துக்கூற முடிகிறது? அதை உலகம் எப்படி பார்க்கும்? என்கிற கேள்விகளை நாம் கேட்டாக வேண்டும்” என்றார் கேண்டர்பரி பேராயர் வணக்கத்துக்குரிய ஜஸ்டின் வெல்பி.

இதுவரை இல்லாத வகையில் முஸ்லிம் தலைவர்கள் 130 பேர் தாக்குதலாளிகளின் இறுதிக்கிரியைகளை செய்ய மறுத்ததோடு மற்றவர்களும் செய்யவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்