சௌதி அரேபியாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி காலமானார்

சௌதி அரேபியாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி லண்டனில் தனது 82வயதில் காலமானார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 2005ல் தன்னுடைய மனைவி லாமியவுடன் ஒரு நிகழ்வில் அத்னான் கஷ்ஷோகி பங்கேற்ற போது எடுத்த படம்

தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக அறியப்பட்ட இந்த தொழிலதிபர், பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையை எடுத்துவந்த சமயத்தில் இறந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

1970 மற்றும் 1980களில், சர்வதேச ஆயுத பேரங்களை நடத்தியதால், உலகின் பணக்கார நபர்களில் ஒருவராக அத்னான் கஷ்ஷோகிஅறியப்பட்டார்.

அவரது விருந்துகள் புகழ்பெற்றவையாக இருந்தன, பெரும்பாலும் பல நாட்கள் நீடிக்கும், ஆனால் அவரது வணிகம் பற்றிய சர்ச்சை எப்போதும் இருந்து வந்தது.

''அவரது கடைசி நாட்களில் அன்பான குடும்பம், குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளால் சூழப்பட்டு அதே நேர்த்தி, வலிமை மற்றும் கௌரவத்தோடு அவர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மனைவி லாமியாவை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்'' என்று கஷ்சோகியின் குடும்பத்தினர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

கத்தார் பிரச்சனை: பயணிகளுக்கு என்ன பாதிப்பு?

கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்

அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்

தற்போது லாக்ஹீத் மார்ட்டின் என்று அறியப்படும் நிறுவனம், முன்னர் லாக்ஹீத் கார்ப்பொரேஷன் என்ற பெயரில் இருந்தது. அந்த நிறுவனத்துடன் நெருங்கி வேலை செய்த சமயத்தில்தான், அத்னான் கஷ்ஷோகி, 1960 மற்றும் 1970களில், அமெரிக்காவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையில் ஆயுத பேரத்தை நடத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்