பிரச்சார யுத்தத்தில் பொய் எது? மெய் எது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரச்சார யுத்தத்தில் பிள்ளைகளும் “நடிகர்களா”?

சிரிய நாட்டு போர் அவலத்தின் சின்னமாக மாறிய இந்த சிறுவனின் முகம் நினைவிருக்கிறதா?

அலெப்போ நகர் மீதான குண்டுமழையில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த பால்வடியும் முகம் கொண பாலகனின் பெயர் ஒம்ரான்.

சிரிய, ரஷ்ய போர்விமானங்களின் அழிவில் மக்கள் படும் துயரத்தின் சாட்சியாக அந்த படம் பரப்பப்பட்டது.

ஆனால் அச்சிறுவன் அரச எதிர்ப்பு குழுவிடமிருந்து மீட்கப்பட்டதாக சிரிய அரசாங்க ஊடகம் கூறுகிறது.

காயங்கள் ஆறிய ஒம்ரானை காட்டும் புதிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

ஒம்ரானின் தந்தையாக தன்னை கூறுபவர் சிரிய அதிபர் அசாதை ஆதரிப்பதாக அந்த காணொளியில் தெரிவிக்கிறார்.

ஆனால் ஒம்ரானின் முந்தைய படம் போலியானது என்று அதிபர் அசாத் முன்பு பலமுறை விமர்சித்திருந்தார்.

இச்சிறுவன் போலியான மீட்பு காணொளிகளில் பலமுறை கிளர்ச்சிக்காரர்களால் நடிக்கவைக்கப்பட்டதாகவும் அசாத் முன்பு கூறியிருந்தார்.

வெள்ளை ஹெல்மெட்குழு விளம்பர நோக்கில் பொய்காணொளிகளை எடுத்ததாக அசாத் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேற்குலக நிதியில் நடக்கும் இந்த குழு காணொளிகளின் வலிமையை விளக்கும் இந்த காணொளியை எடுத்தது.

இந்த காணொளி உண்மையல்ல என்றும் அது ஒரு மீம் என்றும் பின்னர் விளக்கமளித்த அந்த குழு அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தது.

சிரியாவில் 6 ஆண்டுகளாக நீடிக்கும் மோசமான போரில் பிரச்சார தளத்திலேயே மிக உக்கிரமான சண்டை நடக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்