'வழுக்கைத் தலையில் தங்கம்' : மொசாம்பிக்கில் மூடநம்பிக்கையால் மூவர் கொலை

மொசாம்பிக்கில், மத சடங்குகளுக்காக வழுக்கை தலை ஆண்கள் இலக்கு வைத்து தாக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

வழுக்கைத் தலை ஆண்களின் தலைகளில் தங்கம் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் மூன்று பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒருவரின் தலையும் உடல் உறுப்புகளும் அகற்றப்பட்டிருந்தது.

மிலாங்கே மாவட்டத்தில் இதுபோன்ற கொலைகள் நடைபெற்றது தொடர்பாக, சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

டான்சானியா மற்றும் மலாவியை சேர்ந்த வாடிக்கையாளர்களின் செல்வத்தை அதிகரிப்பதற்கான சடங்குகளில், அந்த ஆண்கள் உடல் பாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தார்கள்.

இதேபோன்ற நோக்கங்களுக்காக இந்தப் பகுதிகளில் அல்பினோக்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்