கட்டாரின் குடியேற்ற தொழிலாளர்களின் கவலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கட்டாரின் குடியேற்ற தொழிலாளர்களின் கவலை

குடியேறிகளால் இயங்கும் நாடு கட்டார். உலகின் அதிகபட்ச தனிநபர் வருமானம் கொண்ட நாடும் கூட.

அதன் 90% தொழிலாளர்கள் குடியேறிகள். தற்போதைய மோதலால் தாம் பாதிக்கப்படுவோமோ என இவர்கள் அஞ்சுகிறார்கள்.

கட்டாரில் 87க்கும் அதிகமான நாட்டவர் வாழ்கிறார்கள். வேலை செய்கிறார்கள்.

குடியேற்ற தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தெற்காசிய நாட்டவர். இந்திய, நேபாள, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.

கட்டார் பயங்கரவாதத்துக்கு உதவுதாக கூறி பல நாடுகள் அந்நாட்டுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் கட்டார் செல்வதற்கு பிலிப்பைன்ஸ் அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

தற்போது கட்டாரிலுள்ள மற்ற நாட்டுத் தொழிலாளர்கள் தம் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள்.

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடக்கவுள்ள உலக கால்பந்து போட்டிக்கான பிரம்மாண்ட அரங்கங்கள் கட்ட பெருமளவு குடியேற்றத் தொழிலாளர் அவசியம் தேவை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்