வாக்குச்சாவடிக்கு நாங்கள் வரக்கூடாதா? பிரிட்டன் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்

  • 8 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை TWITTER@KCATCLARKE
Image caption வியாழக்கிழமையன்று கம்ப்ரியாவில் தங்களின் உரிமையாளர்கள் வாக்குப்பதிவு செய்ய சென்ற போது ஃபியோன், லூனா மற்றும் ரோபி ஆகிய நாய்கள் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த காட்சி

பிரிட்டன் எங்கும் பொது தேர்தலில் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், அவர்களின் நாய்களும் தங்களின் வாக்குரிமையை செலுத்துவது போல் வாக்குச்சாவடிகளில் காத்திருப்பதால், எதிர்பார்த்தபடி #DogsAtPollingstations (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் வைரலானது.

படத்தின் காப்புரிமை TWITTER/@SAMICURE
Image caption மான்செஸ்டரில் உள்ள வாக்குச்சாவடியின் வெளியே பொறுமையாக காத்திருக்கும் ஃபோபே

இன்று வியாழக்கிழமை காலையில் வாக்குச்சாவடிகள் திறந்தவுடன் பலரும் வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் தங்களின் நாய்களின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு நேரத்தில் மேற்கூறிய ஹேஷ்டேக் பலஆயிரம் தடவைகள் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 8000-க்கும் மேற்பட்ட டிவீட்கள் பகிரப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை TWITTER/@DACHSHUNDOTTO
Image caption ஹாம்ப்ஷைரில் இன்று காலையில் நிலவிய குளிரையும் பொருட்படுத்தமால் வாக்குச்சாவடியின் வெளியே 'ஆட்டோ' மற்றும் 'அவா' காத்திருக்கும் காட்சி
படத்தின் காப்புரிமை TWITTER/@THESPEER7
Image caption உரிமையாளருக்காக நீண்ட நேரம் காத்திருந்ததில் பொறுமையிழந்த ஒரு நாய்
படத்தின் காப்புரிமை Image copyrightTWITTER/@FALCORETWEETS
Image caption நாட்டிங்காமில் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த ஹுகோ
படத்தின் காப்புரிமை DELI
படத்தின் காப்புரிமை TWITTER/@DRRJWALKER
Image caption மிகவும் தீவிரமான முகபாவனையுடன் ஒரு வாக்குச்சாவடியின் முன்னர் தோன்றும் டிக்பீ
படத்தின் காப்புரிமை TWITTER/@CBBC_HACKER
Image caption வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருக்கும் போது யாராவது தனக்கு பிஸ்கட் தரமாட்டார்களா என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஹேக்கர் டி என்ற நாய்
படத்தின் காப்புரிமை TWITTER/@NED_DONOVAN
Image caption 'எனக்கு வாக்குச்சாவடிக்கு செல்ல விருப்பமில்லை' என்ற மனோபாவத்துடன் வீட்டில் ஓய்வெடுக்கும் ஆட்டோ வான் பிஸ்பார்க்
படத்தின் காப்புரிமை TWITTER/@JOHN_FUSIONPR
Image caption எங்களுக்கும் வாக்குச்சாவடிக்கும் சம்பந்தமில்லை; அதெல்லாம் நாய்களின் வேலைதான் என்று வீட்டில் உறங்கும் ஒரு பூனை

இதுவும் படிக்கலாம்:

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு வைக்காதவர்களின் நாள் எப்படிச் செல்கிறது?

பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்