உலகின் விளிம்பில் இருக்கும் ஒற்றை மாணவர் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேடும் ஸ்காட்லாந்து

உலகின் விளிம்பில் இருப்பதாக விவரிக்கப்படும் ஸ்காட்லாந்து தீவான ஃபௌலாவில் இருக்கும் ஒரே ஒரு மாணவன் படிக்கும் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் தேவையாம் !

படத்தின் காப்புரிமை Kate Hopper / Foula Primary

ஷெட்லாந்திலுள்ள ஃபௌலா துவக்கப்பள்ளியில் மூன்றரை ஆண்டுகள் இந்த பொறுப்பில் வேலைசெய்த பின்னர் ஆசிரியர் ஜேன் ஸ்மித் வேலையை விட்டு செல்ல இருப்பதால் புதிய ஆசிரியரை தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிக்கு ஆண்டுக்கு 49,133 பவுண்டு ( சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய்கள்) ஊதியம் என்றும், மூன்று படுக்கையறை விடுதி வாடகைக்கு உள்ளது என்றும் விளம்பரம் கொடுக்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பம் அனுப்ப வியாழக்கிழமை கடைசி நாளாகும். தென் ஆப்ரிக்கா மற்றும் அஜர்பைஜான் போன்ற தொலைவான நாடுகளில் இருந்தும் இந்த பணிக்கு ஆர்வம் காட்டப்படுகிறது.

ஷெட்லாந்து பெருநிலப்பகுதியின் மேற்கில் இருந்து, 20 மைல் தொலைவில் ஃபௌலா உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் மிக தொலைவில் மக்கள் வாழும் தீவுகளில் ஒன்று பௌலாவாகும்.

"தாய்ப்பால் கல்வி அறிவைப்பெருக்கி, பணக்காரராக்கும்"

லட்சக்கணக்கான இந்திய பெண்கள் பணியிலிருந்து விலகுவது ஏன்?

இங்கு மொத்தம் 32 பேர்தான் வசிக்கின்றனர். 'த எட்ஜ் ஆப் த வேல்டு' ( உலகின் விளிம்பு) என்ற 1937 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மைக்கேல் பவலின் திரைப்படம் இங்குதான் எடுக்கப்பட்டது.

இந்த பள்ளியில் இரண்டு மாணவர்கள் உள்ளனர். ஆனால், நடப்பு கல்வி பருவக்காலம் முடிந்த பின்னர் ஒரு மாணவர் லிர்விக்கிலுள்ள உயர்நிலை பள்ளிக்கு சென்று விடுவார்.

இது பற்றி 38 வயதான ஸ்மித் பிபிசி வானொலியில் ஒலிபரப்பாகும் "குட்மானிங் ஸ்காட்லாந்து" நிகழ்ச்சியில் பேசுகையில், "ஃபௌலாவில் கழித்த நாட்களை மிகவும் விரும்புவதாகவும், அவை ஆச்சரியமானவைகளாக இருந்தன" என்று தெரிவித்தார்.

"நான் வேலை செய்த பெரும்பாலான நேரங்களில் ஒரேயொரு மாணவரே இருந்தார்" என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Sam Ratter
Image caption வேலையில் இருந்து செல்ல இருக்கும் ஆசிரியர் ஜேனி ஸ்மித்

"அந்த மாணவர் துவக்கப்பள்ளியில் மேல் நிலையில் இருந்ததால், நாங்கள் ஃபெர் இஸ்லிக்கு சென்று பார்க்கவும், பெருநிலப்பகுதியில் பல பயணங்களை மேற்கொள்ளவும் முடிந்தது. இது அருமையாக இருந்தது" என்று அவர் குறிப்பிட்டார்.

சரியான சாலைகளை இழந்த உணர்வு

அக்டோபர் மாதத்தில் இந்த வேலையில் இருந்து விலகுகின்ற தன்னுடைய முடிவை பற்றி கூறுகையில், "இந்த பணிக்கு வந்த தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளே இந்த பணியை செய்ய போவதாக வந்தேன். இது என்னுடைய சுய விபரக் குறிப்பில் சிறப்பானதாக இருக்கும் என்று எண்ணினேன். பின்னர் நானாகவே இங்கிருந்து வேலைசெய்வதை தொடர்ந்தேன்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"இப்போது பெருநிலப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்கின்றேன். சாலைகள், சரியான சாலைகள், 5வது கியரில் காரை ஓட்டுவது போன்ற சிறிய விடயங்களை இழந்திருப்பதாக உணர்கிறேன். ஃபௌலாவில் இவற்றை இரண்டாவதாக நீங்கள் எண்ணினால், மிக நன்றாகவே செயல்படுகிறீர்கள்" என்கிறார் ஸ்மித்.

இந்த பணியிடத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று குறிப்பிடும்போது, "நேர்மையாக கூற வேண்டுமென்றால், இந்த பணி ஒரு சிறிய விஷயம்தான். சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்பவராக, தனிமையான இடத்தில் வாழக்கூடியவராக இருக்க வேண்டும்” என்று பணியைவிட்டு செல்லும் இந்த ஆசிரியர் கூறுகிறார்.

வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா?

கல்வி ஆயுதத்தை கையில் எடுக்கும் ஆப்கானிய சிறுமி

"பெருநிலப்பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டவராக நாம் இருக்கலாம். படகோ, விமானமோ இல்லாமல் மூன்று வார காலம் இருந்ததுதான், நான் பெருநிலப்பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு இருந்த அதிக காலம் என்று கருதுகிறேன்" என்று அவர் நினைவுகூர்கிறார்.

"இத்தகைய சூழ்நிலையை தாக்குப்பிடித்து வாழ்பவராக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய கருத்துக்களோடு, ஆர்வமாக வருகின்ற சிறந்த ஒருவரை, ஃபௌலாவில் வாழப்போவதை விரும்புகின்ற ஒருவரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

ஃபௌலாவில் இருந்து பெருநிலப்பகுதி செல்வதற்கு விமானப் பயணநேரம் 15 நிமிடங்கள், படகு பயணம் இரண்டரை மணி நேரமாகும்.

அனுபவமும் தகுதியும், தனிமையில் இனிமை காணும் மனோநிலையும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் !

பிற செய்திகள்

பிரிட்டனின் ஜனநாயகத் திருவிழா: வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு வைக்காதவர்களின் நாள் எப்படிச் செல்கிறது?

இந்தியா: எருமை இறைச்சி ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு

மூதூர் மாணவிகள் பாலியல் வன்முறை: தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்