பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு ?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு ?

பிரிட்டனில் தேர்தல் முடிவடைந்து பரபரப்பாக கடந்து போன முடிவை அறிவிக்கும் கடந்த இரவை அடுத்து பிரதமர் தெரீஸா மே புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளார்.

எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் வட அயர்லாந்தை சேர்ந்த ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார்.

ஆனாலும், இந்த தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு ஒரு பெருத்த அடியாகவும், முக்கிய எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கும் அதன் தலைவர் ஜெரிமி கோர்பனுக்கு பெருத்த முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகின்றது.

இவை குறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு.