பிரிட்டன் தேர்தல்: வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

தன்மன்ஜித் தேஷி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தன்மன்ஜித் தேஷி

பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் முழுக் காலம் முடியும் முன்பே நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சீக்கியர்கள் இடம்பெறுகின்றனர். தலைப்பாகை அணிந்த தன்மன்ஜித்சிங் தேஷியும், சீக்கிய பெண்மணி ப்ரீத் கெளர் கில்லும் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர்.

கன்சர்வேடிவ் கட்சியில் அமைச்சராக பதவிவகித்த ப்ரீதி படேலும் வெற்றிபெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் 56 இந்தியர்கள், வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள்.

மதியம் வரை கிடைத்த தகவல்களின்படி, தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினரில், தொழிலாளர் கட்சியின் சார்பில் ஏழு பேரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ஐந்து பேரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

முந்தைய நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்து பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த முறை அது அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தற்போது வெற்றி பெற்றுள்ளவர்கள் - ப்ரீதி படேல்(கன்சர்வேடிவ் கட்சி) கீத் பாஜ் (தொழிலாளர் கட்சி), அரவிந்த் ஷர்மா (தொழிலாளர் கட்சி)

தொழிலாளர் கட்சி

1. கீத் பாஜ் (கிழக்கு லெஸ்டர்), வெற்றி

2. வைலெரி பாஜ் (தெற்கு பால்சால்), வெற்றி

3. சீமா மல்ஹோத்ரா (ஃபெல்தம் & ஹேஸ்டன்), வெற்றி

4. லீஜா நந்தி (பீகன்), வெற்றி

5. வீரேந்திர ஷர்மா (இலிங் செளதால்), வெற்றி

6. தன்மன்ஜித் ஜேஷி (ஸ்லாவோ), வெற்றி

7. ப்ரீத் கெளர் கில் (பர்மிங்கம் எஜ்பைஸ்டன்), வெற்றி

8. ஹிதேஷ் டேலர் (கிழக்கு சரே), தோல்வி

9. நவீன் ஷா (கிழக்கு ஹைரோ), தோல்வி

10. நவேந்து மிஷ்ரா (ஹேஜல் க்ரோவ்), தோல்வி

11. குல்தீப் சிங் சஹோதா (டெல்ஃபோர்ட்), தோல்வி

12. மன்ஜிந்தர் கங் (டெக்ஸ்பரி), தோல்வி

13. நீரஜ் பாடில் (பட்னி), தோல்வி

14. ரோஹித் தாஸ்குப்தா (கிழக்கு ஹைம்ப்ஷாயர்), தோல்வி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கன்சர்வேடிவ் கட்சி: இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

1. சுயேலா ஃபர்னாண்டஸ் (ஃபேயரஹைம்), வெற்றி

2. ப்ரீதி படேல் (விதம்), வெற்றி

3. ஆலோக் ஷர்மா (மேற்கு ரீடிங்), வெற்றி

4. ரிஷி சுன்க் (ரிச்மண்ட்), வெற்றி

5. ஷைலேஷ் வாரா (வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷாயர்), வெற்றி

6. ரீனா ரேஞ்சர் (பர்மிங்தம் ஹால் க்ரீன்), தோல்வி

7. சமீர் ஜஸால் (ஃபெல்தம் & ஹேஸ்டன்), தோல்வி

8. அமீத் ஜோஹியா (வடக்கு ப்ரெண்ட்), தோல்வி

9. ரேஷம் கோட்சா (வடமேற்கு கோவெண்ட்ரி), தோல்வி

10. மீரா சோனேசா (தெற்கு லெஸ்டர்), தோல்வி

11. ராகுல் பன்சாலி (மத்திய ப்ரெண்ட்), தோல்வி

12. மினேஷ் தலாதி (பார்கிங்), தோல்வி

13. பால் உப்பல் (தென்மேற்கு ஊல்வர்ஹைம்ப்டன்), தோல்வி

பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு ?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு ?

பிற செய்திகள்

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

தமிழக கல்வித் துறையில் தேவை சீர்திருத்தங்களா? அடிப்படை மாற்றங்களா?

விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்