“எனது அரசு ஸ்திரத்தன்மை வழங்கி, நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும்” - தெரீசா மே

ஐக்கிய ராஜ்ஜியத்தில் புதிய அரசை அமைக்கப்போவதாக தெரீசா மே தெரிவித்திருக்கிறார். தன்னுடைய அரசு 'ஸ்திரத்தன்மையை வழங்குவதோடு', நாட்டை 'பாதுகாப்பாகவும் பாத்திரமாகவும்' வழிநடத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக வலுவான உறவோடு இருந்து வருகின்ற கன்சர்வேட்டிவ் கட்சியும், ஜனநாயக ஒன்றியக் கட்சியும் இணைந்து பணியாற்ற போவதாக தெரீசா மே குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள், முந்தைய அதே கால அட்டவணையில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 நாட்களில் தொடங்கவிருக்கும் முக்கியமான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் நாட்டை வழிநடத்தப் போவதாக உறுதியளித்திருக்கும் தெரீசா மே, ஐக்கிய ராஜ்ஜியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய அனைத்தையும் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து எவ்வாறு பணிபுரியப் போகிறார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு ?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரிட்டிஷ் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு ?

தொடர்படைய செய்திகள்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆட்சி அமைக்க அனுமதி கோருகிறார் தெரீசா மே

பிரிட்டன் தேர்தல்: வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

பிரிட்டனின் பொதுத் தேர்தல் முடிவுகளின் எதிரொலி: பவுண்ட் வீழ்ச்சி

பிரிட்டனில் `தொங்கு நாடாளுமன்றம்`

பிரிட்டன் தேர்தல்: பெரும்பான்மையை இழக்கிறார் தெரீசா மே?

பிரிட்டனின் ஜனநாயகத் திருவிழா: வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்

பிற செய்திகள்

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

தமிழக கல்வித் துறையில் தேவை சீர்திருத்தங்களா? அடிப்படை மாற்றங்களா?

விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்