ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ முடிதுறக்க அனுமதிக்கும் மசோதா நிறைவேறியது

  • 9 ஜூன் 2017
ஜப்பான் அரசர் அகிஹிட்டோ படத்தின் காப்புரிமை AFP

ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவை முடிதுறக்க அனுமதிக்கும் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஜப்பானில் 200 ஆண்டுகளில் பேரரசர் ஒருவர் அரியணையில் இருந்து விலகவிருப்பது கடந்த 200 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

83 வயதான பேரரசர் அகிஹிட்டோ, தனது வயது மற்றும் உடல் நலத்தின் காரணமாக அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவது கடினமாக உள்ளது என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜப்பான் நாட்டு சட்டங்களின்படி பேரரசர் பதவி விலகமுடியாது.

பேரரசர் பதவி ஓய்வு பெறுவதற்கான நடைமுறைகளை ஜப்பான் அரசு இனிமேல் தொடங்கும் என்றும், அது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை JANEK SKARZYNSKI/AFP/Getty Images

பேரரசர் பதவி ஓய்வு பெற்றதும், பட்டத்து இளவரசர் நருஹிட்டோவிற்கு முடி சூடப்படும்.

1989 ஆம் ஆண்டில் அவரது தந்தை ஹிரோஹிட்டோவின் மரணத்திற்குப் பின்னர் அகிஹிட்டோ அரியணையில் அமர்ந்தார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரசர், புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் பெற்றுக்கொண்டார்.

காதலுக்காக அரச அந்தஸ்தை தியாகம் செய்யும் இளவரசி

அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு

கடந்த ஆண்டு நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒரு முக்கியமான உரையில், தனது உடல்நலம் மீது "கட்டுப்பாடுகளை" உணர ஆரம்பித்துவிட்டதாகவும், அதிகாரபூர்வமான கடமைகளை நிறைவேற்றுவதுவதற்கு சிரமப்படுவதாகவும் கூறினார்.

ஜப்பான் நாட்டு பேரரசர், அரசியல் ரீதியிலான அறிக்கைகள் வெளியிடுவதை அந்நாட்டு அரசியலமைப்பு தடை செய்கிறது. எனவே, பதவியில் இருந்து விலக விரும்புவதாக அகிஹிட்டோ வெளிப்படையாக சொன்னால், அது சட்டத்தின் மீது கூறப்படும் கருத்தாக கருதப்படும்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பட்டத்து இளவரசர் நருஹிட்டோ (இடப்புறமிருந்து மூன்றாவது) தந்தையின் ஓய்வுக்கு பின் அரியணை ஏறுபவர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர்

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, பேரரசரின் பதவி ஓய்வுக்கு பிறகு அவருடைய 57 வயது மகன் நருஹிட்டோ உடனடியாக சிம்மாசனத்தில் அமர்வார். ஆனால் அவரோ, அவரது வாரிசுகளோ இந்தச் சட்டத்தின் கீழ் பதவி ஓய்வுபெற அனுமதி கிடையாது.

பேரரசரின் பதவி ஓய்வு பெறும் நாளை ஜப்பான் அரசு இதுவரை முடிவு செய்யவில்லை என்றாலும், சட்டம் நடைமுறைக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குள் பதவி ஓய்வு நடைபெறவேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

முடி துறக்க விரும்பும் ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ

அரியணை இறங்க ஜப்பான் பேரரசர் விருப்பம்

பதவி மாற்றம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டில், பேரரசரின் பணி என்ன?

ஜப்பானில் பேரரசருக்கு அரசியல் அதிகாரங்கள் கிடையாது, ஆனால் வெளிநாட்டு உயர் பிரமுகர்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு அதிகாரப்பூர்வ கடமைகள் அரசருக்கு இருக்கிறது. ஷின்டோ மதத்துடன் பிணைந்துள்ள ஜப்பான் முடியாட்சியில், அரசரே இன்னும் சமய விழாக்களை நடத்துகிறார்.

படத்தின் காப்புரிமை Kiyoshi Ota/Getty Images

பேரரசரின் பதவி ஓய்வு குறித்து பொதுமக்களின் கருத்து என்ன?

கியோடோ செய்தி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில்,பேரரசர் அகிஹிட்டோ பதவி ஓய்வு பெறுவதை சட்டப்படி அனுமதிக்கலாம் என்று 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவித்தனர்.

ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமியின் 5வது ஆண்டு

அரச பரம்பரை தொடர்பான சட்டத் திருத்தம் பற்றி இன்னும் வேறு ஏதாவது விவாதங்கள் இருக்கிறதா?

ஜப்பான் அரசருக்கு எந்த பேரனும் இல்லாத நிலையில் ஒரு பெண் அரியணை ஏற முடியுமா? என்ற விவாதங்கள் 2006 ஆம் ஆண்டு எழுந்தது. ஆனால், அரசக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் அந்த விவாதங்கள் தள்ளிப்போடப்பட்டன.

பிற செய்திகள்

“எனது அரசு ஸ்திரத்தன்மை வழங்கி, நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும்” - தெரீசா மே

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

தமிழக கல்வித் துறையில் தேவை சீர்திருத்தங்களா? அடிப்படை மாற்றங்களா?

விசித்திரமான வழிகளில் தங்கக் கடத்தல்

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ம.தி.மு.க. தகவல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்