தென் ஆப்ரிக்கா: மீட்கப்பட்ட சர்க்கஸ் சிங்கங்கள் விஷம் வைத்து கொலை

  • 10 ஜூன் 2017

தென் அமெரிக்க சர்க்கஸ் நிறுவனங்களிடம் இருந்து மீட்கப்பட்டு, தென் ஆப்ரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை ANIMAL DEFENDER INTERNATIONAL

இந்த தகவலை அளித்துள்ளதற்கு வெகுமதி வழங்கலாம் என்று ஜோஸ் மற்றும் லிசோ என்று அழைக்கப்படும் இந்த சிங்கங்கள் உள்பட கடந்த ஆண்டு மொத்தம் 33 சிங்கங்களை இடம்பெயரச் செய்திருக்கும் சர்வதேச விலங்கு பாதுகாவலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சிங்கங்களின் தலைகள், தோல்கள், வால்கள் மற்றும் பாதங்கள் அகற்றப்பட்டிருந்தன. சில சடங்குகளை நிறைவேற்றுவதற்காக இவை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை இது எழுப்பியுள்ளது.

வாயில் குட்டி,ஆற்றில் வெள்ளம்,கடக்கும் தாய்ச் சிங்கம்

தென் ஆப்ரிக்காவில் சரணாலயத்திலிருந்து தப்பிய சிங்கம்

இந்த குற்றம் குறித்து தென் ஆப்ரிக்க போலீஸூம், சட்டத்திற்கு புறம்பான வேட்டை தடுப்பு அமைப்புக்களும் தற்போது புலனாய்வு நடத்தி வருகின்றன.

படத்தின் காப்புரிமை Warren Little/Getty Images

இந்த இரண்டு சிங்கங்களும் கொல்லப்பட்டிருப்பதை அறிய வந்தபோது, இதயம் நொறுங்கி போய்விட்டதாக சர்வதேச விலங்கு பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் ஜான் கிரிமெர் தெரிவித்திருக்கிறார்.

ஜிம்பாப்வேயின் 'பெருமைக்குரிய சிங்கம்' கொலை

ஜிம்பாப்வேயின் 'பெருமைமிக்க சிங்கத்தை' கொன்றவர் "அமெரிக்க சுற்றுலாப் பயணி"

“ஜோஸ் மற்றும் லிசோ சிங்கங்கள் சர்க்கஸில் நிறுவனத்தில் இருந்தபோது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு துர்பாக்கியமான வாழ்க்கை வாழ்ந்துள்ளன. ஆப்ரிக்கா அவற்றின் வாழ்க்கைக்கு புதிய அத்தியாயத்தை அளித்தது" என்று இந்த குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சர்க்கஸ் நிறுவனத்தின் தலைவர் தலையில் அடித்ததால் ஜோஸ் என்கிற சிங்கத்திற்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Images

தென் ஆப்ரிக்காவின் லிம்போபோ மாகாணத்தின் வட பகுதியிலுள்ள தனியார் பண்ணையின் 5 ஆயிரம் ஹெக்டேர் பகுதிக்குள் இருக்கும் இமோயா சிங்கங்கள் சரணாலயத்தில் இந்த இரண்டு சிங்கங்களும் வாழ்ந்து வந்தன.

ஜாம்பியாவில் சிறுத்தை, சிங்கம் வேட்டைக்கு அனுமதி

வனவிலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கத் தடை

மீட்கப்படும் விலங்குகளை 21 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க சரணாலயங்களுக்கு இடம்பெயர செய்திருப்பதில், சிங்கங்கள் கொலை செய்யப்படுகின்ற சம்பவம் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று சர்வதேச விலங்கு பாதுகாவலர்கள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பிற செய்திகள்

பிற செய்திகள்

தம்பி பிறந்தபோது செவிலித்தாயான 12 வயது சகோதரி

தலித்தை திருமணம் செய்ததால் மகளை எரித்துக் கொன்ற முஸ்லிம் தாய்

சினிமா விமர்சனம்: தி மம்மி

இளம் குழந்தைகள் உயரமாக வளர தினமும் ஒரு முட்டை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்