ஐ எஸ் அமைப்பின் தலைநகரான ராக்காவை நோக்கி முன்னேறிய அமெரிக்க ஆதரவு படைகள்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் 'தலைநகரான', ராக்காவின் மேற்குப் பகுதிக்குள் அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய படைகள்முன்னேறியுள்ளதாக,அவையும், ஒரு கண்காணிப்பு அமைப்பும் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ராக்கா நகரை நோக்கி முன்னேறிய அமெரிக்க ஆதரவு படைகள்

இந்த சிரியா நகருக்குள் ஒரு இரண்டாவது போர் முனையை இந்த நடவடிக்கை திறந்திருப்பதாக சிரியா ஜனநாயகப் படைகள் என்ற அந்த குழு கூறியது.

இந்த வாரம் முன்னதாக நகரின் கிழக்குப் பகுதிக்குள் அவைகள் நுழைந்திருந்தன.

அதன் போராளிகள் ஜிஹாதிகளுடன் கடும் மோதல்களில் ஈடுபட்டதாக அது கூறியது.

எஸ்.டி.எஃப் எனப்படும் இந்த அமைப்பு அமெரிக்க கூட்டணி நாடுகளின் வான் தாக்குதல் ஆதரவுடன், பல மாதங்களாக இந்த நகரை முற்றுகையிட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Reuters

ஐ.எஸ் அமைப்பால் 2014-லிருந்து ராக்கா நகரம் கைப்பற்றப்பட்டிருந்திருக்கிறது. இது ஜிஹாதிகள் குழுவிற்கு ஒரு முக்கிய மையமாகவும் இருந்திருக்கிறது.

இதை சுமார் 4,000 போராளிகள் தாக்குதலிலிருந்து காத்து வருகிறார்கள்.

எஸ்.டி எஃப் 2015ல் உருவான ஒரு அரபு-குர்திஷ் கூட்டணியாகும்.

இதுவும் படிக்கலாம்:

ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று 'புதிய வரலாறு' படைத்த ஜெலீனா

டிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு

“இலங்கை போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உள்ளது”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்