'பாவத்திற்கான வரி': இனி செளதியில் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை

செளதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளின்படி, புகைபிடிப்பவர்கள் இனிமேல் தங்கள் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை கொடுக்கவேண்டும்.

படத்தின் காப்புரிமை PA

'பாவத்திற்கான வரி' என்று கூறப்படும் இந்த வரி, சிகரெட்டுகளுக்கு மட்டுமல்ல, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களுக்கும் பொருந்தும்.

கச்சா எண்ணெய் விற்பனை வருவாய் குறைவை ஈடுகட்டுவதற்கான இந்த வரி விதிப்பு, செளதி அரேபியாவில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகள் அனைத்திலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பல தசாப்தங்களாக வரியில்லா அமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பெரிய அளவிலான மானியங்களாலும் செளதி அரேபிய மக்கள் பயனடைந்துள்ளனர்.

வரி காரணமாக விலை இருமடங்காக அதிகரிக்க இருப்பதால், பெருமளவு இலாபம் ஈட்டுவதற்காக பல வர்த்தகர்கள் சிகெரெட்டுகளை பதுக்கி வைக்கத் தொடங்கியிருப்பதாக செளதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.

பிற செய்திகள்

எந்திர பகுதியில் துளை: சிட்னிக்கு திரும்பி தரையிறங்கிய 'சைனா ஈஸ்டர்ன்' விமானம்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும் – அருண் ஜெட்லி

ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்