சிறையிலிருந்த அமெரிக்க மாணவரை விடுதலை செய்தது வடகொரியா

பிரச்சார பதாகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட அமெரிக்க மாணவரை, வடகொரியா விடுதலை செய்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவர் (கோப்புப் படம்)

வடகொரியாவிற்கு எதிரான விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஓட்டோ வார்ம்பியர் என்ற மாணவருக்கு பதினைந்து ஆண்டுகள் கடின உழைப்பு தண்டனை வழங்கப்பட்டது.

ஓராண்டிற்கும் மேலாக கோமாவில் இருந்த வார்ம்பியர், மருத்துவ வசதிகளுடன் வடகொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

விசாரணைக்கு பிறகு நோயுற்ற வார்ம்பியருக்குக் தூக்க மாத்திரை கொடுக்கப்பட்ட பிறகு, அவர் கண்விழிக்கவே இல்லை என்று அவரது பெற்றோர்கள் கூறியதை வாஷிங்டன் போஸ்ட் மேற்கோள் காட்டுகிறது.

இருபத்தியோரு வயது மாணவர் வார்ம்பியரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான வீடியோவில், சுற்றுலா குழுவுடன் பயணம் செய்தபோது பதாகையை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டதாக பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்

கத்தாரை தனிமைப்படுத்துவது இஸ்லாமிய மதிப்பீடுகளுக்கு எதிரானது: எர்துவான்

குடியேறிகள் முகாமில் வழங்கப்பட்ட உணவால் பலர் பாதிப்பு: உணவில் நச்சுத்தன்மையா?

வீடியோவில் இருப்பது நான்தான்; குரல் என்னுடையதல்ல: சரவணன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்