தெரீசா மே ஆட்சியை ஆதரிக்க கூட்டணி கட்சி கேட்கும் விலை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தெரீசா மே ஆட்சியை ஆதரிக்க கூட்டணி கட்சி கேட்கும் விலை என்ன?

பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கான நாடாளுமன்ற பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்லென் ஃபோஸ்டர் செய்துகொள்வார் என தான் நம்புவதாக வட அயர்லாந்துக்கான பிரிட்டிஷ் அமைச்சர் ஜேம்ஸ் புரோகென்ஷேர் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்காலம் முடிய மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் முன்னதாகவே தேர்தலை நடத்தி கூடுதல் பெரும்பான்மையை பெறும் தனது முயற்சியில் தோல்வியடைந்ததற்காக தெரீஸா மே தனது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று திங்கட்கிழமை மன்னிப்பு கோரினார்.

இன்று செவ்வாய்க்கிழமை அவர் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்லென் ஃபாஸ்டரை நேரில் சந்தித்து இரு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு குறித்து பேச்சுக்கள் நடத்தினார்.

இரு கட்சித்தலைமைகளும் பரஸ்பர ஆதரவு நிலைப்பாட்டை வலியுறுத்தினாலும், இந்த புரிந்துணர்வு நீடிக்குமா என்பதில் தெரீசா மேயின் கட்சிக்குள்ளும் எதிர்கட்சிகள் மத்தியிலும் பரவலான சந்தேகங்கள் நிலவுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்