லண்டன் தீ - பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

லண்டன் தீ - பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

  • 14 ஜூன் 2017

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கடந்து போனது இன்னுமொரு மோசமான இரவு.

நள்ளிரவுக்கு பின், இன்றுவிடிகாலை நூற்றுக்கணக்கானவர்கள் வசித்த மிகப்பெரிய அடுக்குமாடி குயிருப்பில் ஏற்பட்ட மோசமான தீயில் குறைந்தது ஆறுபேர் கொல்லப்பட்டனர். ஆனால் தீயின் தீவிரம் அதிகமாக இருக்கும் நிலையில், கட்டிடத்துக்குள் பலர் சிக்கியதாக கருதப்படுவதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறைந்தது எழுபத்தி நான்குபேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருபது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலர் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர்.

இருபத்தி நான்கு மாடிகளைக்கொண்ட கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பு, நகரின் மேற்கில் இருக்கிறது.

அந்த கட்டிடத்தை சென்றடைவது தீயணைப்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. கட்டிடத்தில் இருந்து எரியுண்ட சிதிலங்கள் விழுந்தபடி இருப்பதால் அந்த கட்டிடமே இடிந்துவிழலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

இந்த பெரும் சோகம் எப்படி துவங்கியது, என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களை தொகுத்துத் தருகிறார் பூபாலரட்ணம் சீவகன்.

தொடர்புடைய செய்திகள் :

லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீ: 6 பேர் பலி

லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்